மாம்பலம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
மாம்பலம் தொடருந்து நிலையம் (Mambalam railway station, நிலையக் குறியீடு:MBM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
மாம்பலம் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
மாம்பலம் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மாம்பலம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°2′14″N 80°13′39″E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MBM | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1911[1] | ||||
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931[2] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையத்தின் அருகிலேயே மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் தி. நகர் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது.
1911 ஆம் ஆண்டில் சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை புறநகர் இரயில் சேவை இயக்கிய போது, மாம்பலம் இரயில் நிலையம் கட்டப்பட்டது. சென்னைக் கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையிலான புறநகர் சேவை 11 மே 1931 அன்று இயக்கிய போது, 1931 நவம்பர் 15 ஆம் தேதி இரண்டு இரயில் தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[2]
சென்னை நகரின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றான மாம்பலம் இரயில் நிலையம், ஒரு நாளைக்கு 200,000 பயணிகளை கையாளுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் பத்தொன்பது விரைவுத் தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து, இந்நிலையத்தின் வழியாக செல்கின்றன.[3]
இந்நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 500 முதல் 600 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும்.[4]
இந்நிலையத்தின் தெற்கு பகுதியில் தி. நகர் ரங்கநாதன் தெருவில் இறங்கும் ஒரு நடைப்பாலம் உள்ளது. இருப்பினும், மக்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நடைப்பாலம் 2014 ஆம் ஆண்டு வடக்கு பகுதியில் கட்டப்பட்டது.[5][6] இந்த நிலையத்தில் பயணிகள் முன்பதிவு மையம் அமைந்துள்ளது. அதனால் தி. நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மற்றும் வடபழனி உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இங்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு பத்து சேவை மையமும், விசாரணைகளுக்கான மற்றொரு சேவை மையமும் கொண்டுள்ளது, மேலும் தினமும் 2,500 பயணச்சீட்டுகள் விற்பனை ஆகிறது.[7]
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[8][9][10][11]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, மாம்பலம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 14.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[12][13][14][15][16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.