இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மாதவராவ் சிவாஜிராவ் சிந்தியா (Madhavrao Jivajirao Scindia, 10 மார்ச் 1945 – 30 செப்டம்பர் 2001)[1] என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார். முன்னதாக, 1961 ஆம் ஆண்டில், இவருக்கு மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தின் சந்ததிப் பட்டம் வழங்கப்பட்டது. ஆனாலும், 1971 இல் அறிவிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தச்சட்டத்தின் படி,[2] இந்திய அரசு சுதேசிய இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை இல்லாதொழித்தது.[3][4][5][6][7][8][9][10]
மாதவராவ் சிந்தியா Madhavrao Scindia | |
---|---|
2005 இந்திய அஞ்சல் தலையில் சிந்தியா | |
விமானப் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 1991–1993 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | அர்மோகன் தவான் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
சுற்றுலாத்துறை அமைச்சர் | |
பதவியில் 1991–1993 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 1995–1996 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
பின்னவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
இரயில்வே அமைச்சர் | |
பதவியில் 22 அக்டோபர் 1986 – 1 திசம்பர் 1989 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | மோசினா கித்வாய் |
பின்னவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
குவாலியர் மகாராசா | |
பதவியில் 1961–2001 | |
முன்னையவர் | சிவாஜிராவ் சிந்தியா |
பின்னவர் | ஜோதிராதித்யா சிந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை, மும்பை மாகாணம், இந்தியா | 10 மார்ச்சு 1945
இறப்பு | 30 செப்டம்பர் 2001 56) மைன்புரி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாதவிராஜி சாகிப் சிந்தியா |
உறவுகள் | பார்க்க: சிந்தியா |
பிள்ளைகள் | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா சித்ராங்கதா ராஜி சிந்தியா |
வாழிடம்(s) | செய் விலாசு மகால் (குவாலியர்), குவாலியர் |
மாதவ்ராவ் குவாலியர் அரசின் கடைசி மகாராஜா சிவாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறந்தவர். இவர் தனது உயர்படிப்பை இலண்டன் வின்செசுட்டர் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு புதிய கல்லூரியிலும் கற்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன், தமது தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடலானார். 1971 இல் தனது 26-வது அகவையில் குவாலியரில் இருந்து மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இருந்து ஒன்பது தடவைகள் மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேர்தலிலும் இவர் தோற்றதில்லை. 1984 இல் இரயில்வே அமைச்சராக[11] ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1990 முதல் 1993 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
2001 செப்டம்பர் 30 இல் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார். கிங் ஏர் ச்-90 வானூர்தியில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவரக்ளில் ஊடகவியலாலர்கள் சஞ்சீவ் சின்கா (இந்தியன் எக்சுபிரசு), அஞ்சு சர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஆகியோரும் அடங்குவர்.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.