பாக்கித்தானிய குழந்தைகள் கல்வி ஆர்வலர் From Wikipedia, the free encyclopedia
மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.[2][3] இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
மலாலா யூசப்சையி | |
---|---|
ملاله یوسفزۍ | |
தாய்மொழியில் பெயர் | ملاله یوسفزۍ |
பிறப்பு | 12 சூலை 1997 மிங்கோரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான் |
தேசியம் | பாக்கித்தானியர் |
இனம் | பஷ்தூன்[1] |
பணி | பெண்களின் உரிமைகள், கல்வி, வலைப்பதிவர் |
அறியப்படுவது | தாலிபானின் கொலை முயற்சி |
சமயம் | சன்னி இசுலாம் |
உறவினர்கள் | Ziauddin Yousafzai (தந்தை) |
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.[4][5] இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது.[6]
2014ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
மலாலா யூசுப்சையி, நவம்பர் 15, 2021 அன்று, பர்மிங்காமில் பாக்கித்தான் துடுப்பாட்ட கழக மேலாளரான[7] அசர் மாலிக்கை மணந்தார்.[8]
2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.[12] இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.[13]
Seamless Wikipedia browsing. On steroids.