From Wikipedia, the free encyclopedia
மர்துக் (Marduk) (ஆப்பெழுத்து: 𒀭𒀫𒌓 dAMAR.UTU; சுமேரியம்: amar utu.k சூரியனின் குழந்தை; சூரியக் குட்டி;பாராம்பரிய சிரியாக் மொழி: ܡܪܘܿܕ݂ܵܟܼ (Mrōḏāḵ),[3]பண்டைய கிரேக்கம் Μαρδοχαῖος,[4]பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக் கடவுள் ஆவார்.[5] கிமு 1800-இல் அம்முராபி ஆட்சிக் காலத்தில் மர்துக் கடவுள் பாபிலோன் நகரத்தின் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டனர். படைப்புக் கடவுளான என்கியின் மகனான மர்துக் நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி ஆவார். இவரது உடன்பிறந்தவர்களில் ஒருவரான உது சூரியக் கடவுள் ஆவார்[6]. இவரது மகன் நாபூ எழுத்தறிவு, நுண்கலைகள், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கடவுள் ஆவார். இவரது மர்துக்கின் வாகனமாகவும், பணியாளராகவும் டிராகன் எனும் விலங்கு உள்ளது[7]. மர்துக் கடவுள் வியாழக் கோளுடனும், பண்டைய கிரேக்கர்களின் சியுசு கடவுள் மற்றும் உரோமானியர்களின் ஜுபிடர் கடவுளுடனும் ஒப்பிடப்படுகிறார்[8]
மர்துக் | |
---|---|
இடம் | பாபிலோன் |
கிரகம் | வியாழக் கோள் |
துணை | சர்பனித் |
பெற்றோர்கள் | என்கி மற்றும் தம்கல்லுனா |
சகோதரன்/சகோதரி | உது, நின்சர், நின்குர்ரா, நின்தி |
குழந்தைகள் | நாபூ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.