மதுரவாயல்
சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
மதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், மதுரவாயல் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச் சாலை, மதுரவாயலைக் கடந்து, சென்னையின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.
மதுரவயல் | |
ஆள்கூறு | 13°03′56″N 80°09′39″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | மதுரவாயல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | மதுரவாயல் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 44,127 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 36 மீட்டர்கள் (118 அடி) |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.