Remove ads

துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாக்கித்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.

விரைவான உண்மைகள் உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு, முதலில் விளையாடியது ...
துடுப்பாட்டம்
Thumb
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புபன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
முதலில் விளையாடியது18ஆம் நூற்றாண்டில்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
அணி உறுப்பினர்கள்இரு அணியில் தலா 11 வீரர்கள்
இருபாலரும்ஒருவருக்கான
பகுப்பு/வகைஅணி, பந்தும் மட்டையும்
கருவிகள்துடுப்பாட்டப் பந்து, துடுப்பாட்ட மட்டை, இழப்பு
விளையாடுமிடம்துடுப்பாட்டக் களம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1900 (கோடைக் காலத்தில் மட்டும்)
மூடு

துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு அடிப்படையில் விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.

Remove ads

விதிகள் மற்றும் ஆட்ட முறைகள்

Thumb
5
7
7
11
12
12
நடுவர்
இலக்கு
காத்திருப்பவர்
பந்துவீச்சாளர்
5
பந்து
வீசுகளம்
7
எகிறும் களம்
மட்டையாடுபவர்
இலக்கு
இலக்கு கவனிப்பாளர்
11
முதல் நழுவு
12
திரும்பு வரைகோடு

ஆட்டம்

முதலில் மட்டைவீசும் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் வீசுகளத்தின் இரு முனைகளிலும் உள்ள எல்லைக்கோடுகளில் நின்று கொள்வர். பந்துவீசும் அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர் மட்டையாடுபவரின் எதிர்முனையில் இருந்து பந்து வீசுவார். அவர் இலக்கை நோக்கிக் குறிவைத்து பந்து வீசி மட்டையாடுபவரை வீழ்த்த முயற்சி செய்வார். இலக்கின் முன் நிற்கும் மட்டையாடுபவர் அந்த பந்தை இலக்கின் மீது படாமல் மட்டையைக் கொண்டு தடுக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் அடித்துவிட்டு வீசுகளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிச்சென்று அங்கு இலக்குக்கு முன்பு உள்ள எல்லைக்கோட்டைத் தன் மட்டையால் தொடலாம். அவருடன் எதிர்முனையில் காத்திருப்பவரும் முனைமாற வேண்டும். இதன்மூலம் மட்டையாடுபவருக்கு ஓர் ஓட்டம் மதிப்பெண்ணாகக் கிடைக்கும். இவ்வாறு அவர் எத்தனை முறை முனைமாறிச் சென்று எல்லைக்கோடுகளைத் தொடுகிறாரோ அத்தனை ஓட்டங்கள் கிடைக்கும். மேலும், மட்டையாடுவர் அடித்த பந்து ஆடுகளத்தின் எல்லையைத் தாண்டிவிட்டால் அவருக்கு 4 அல்லது 6 ஓட்டங்கள் வழங்கப்படும். அப்போது முனைமாற்றத்தில் எடுத்த ஓட்டங்கள் கணக்கில் சேராது. பந்து இலக்கின் மீது பட்டுவிட்டாலோ அடித்த பந்து நிலத்தில் படாமல் பந்துவீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் பிடிபட்டு விட்டாலோ மட்டையாளர் ஆட்டமிழப்பார். அதன்பிறகு மட்டையாடும் அணியின் மற்றொரு வீரர் வந்து தனது அணியின் ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு பத்து மட்டையாளர்களை பந்து வீசும் அணியினர் வீழ்த்திவிட்டால் மட்டையாடும் அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியவற்றைத் தவிர மேலும் சில வழிமுறைகளும் உள்ளன.

ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டைவீசும். இறுதியில் எதிரணியை விட அதிக ஓட்டங்கள் பெற்றுள்ள அணி வெற்றி பெறும்.

ஆடுகளம்

நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த துடுப்பாட்ட மைதானத்தின் நடுவில் சுமார் மீட்டர் நீள அகலத்தில் வீசுகளம் (pitch) எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும்.

இலக்கு மற்றும் வரைகோடு

வீசுகளத்தின் இரு முனைகளிலும் 20 மீட்டர் தூரத்தில் இலக்கு அமைக்கப்பட்டிருக்கும். இலக்கு என்பது ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் மூன்று மரத் தண்டுகளையும் அதன் மேல் இரண்டு சிறிய மரக் கட்டைகளையும் கொண்டு அமைக்கப்படும் கருவியாகும். அதன் மொத்த உயரம் 72 செண்டிமீட்டர் (28 அங்குலம்). மேலும் மூன்று தண்டுகளின் ஒருங்கிணைந்த அகலம், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் 23 செண்டிமீட்டர் (9 அங்குலம்) இருக்கும்.

வீசுகளத்தில் இரண்டு ஆடும் வரைகோடுகள் மற்றும் இரண்டு திரும்பு வரைகோடுகள் என்று மொத்தம் நான்கு வரைகோடுகள் இருக்கும்.

மட்டை மற்றும் பந்து

வில்லோ எனும் மரத்திலிருந்து மட்டை தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்டுகள் ஆகும். இதை சோன்பால் என்பவர் முதன் முதலில் வடிவமைத்தார்.

அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே பந்து காணப்படுகிறது. இதன் சுற்றளவுகள் 20.79 செ.மீ முதல் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இதன் எடை அண்ணளவாக 5.75 அவுன்சு ஆகும்.

நடுவர்

ஆடுகளத்தில் நடைபெறும் துடுப்பாட்ட விளையாட்டு இரண்டு கள நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் இழப்புக்குப் பின்புறம் நிற்பார். மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் இலக்கிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் "square leg" எனப்படும் பகுதியில் நிற்பார்.

நடுவர்களின் முதன்மையான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும். அதாவது வீசுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகல வீச்சா? (wide) அல்லது பிழை வீச்சா? (no ball)? மேலும் இழப்பு தாக்கப்படும் முன்பு மட்டையாளர் எல்லைக்கோட்டிற்குள் தனது மட்டையை வைத்திருந்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் வீரர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும்.

இதுதவிர கள நடுவர்கள் பணி, எப்பொழுது ஆட்டம் தொடங்குவது, இடைவெளி எப்பொழுது விடுவது, வீசுகளத்தின் தன்மை, விளையாடுவதற்கு உகந்த வானிலை உள்ளதா? எப்பொழுது ஆட்டத்தை முடிப்பது அல்லது கைவிடுவது? இதுபோன்ற முடிவுகளும் கள நடுவர்களால் தீர்மானிக்கப்படும்.

மூன்றாவது நடுவர்

பெரும்பாலும் மூன்றாவது நடுவர் என்பவர் களத்திற்கு வெளியே இருப்பார். தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் போட்டிகளில் மூன்றாவது ஆட்ட நடுவரின் பங்கு இருக்கும். இவரது பணி, கள நடுவர்களால் ஒரு தீர்பபை வழங்க இயலாத போதும் அல்லது ஒரு சர்ச்சையான முடிவை கள நடுவர்கள் எடுக்கும்போது அதை மறுபரிசீலனை செய்வதும் (தொலைக்காட்சியில் பதிவான் காட்சிகள் மூலம் ஆராய்ந்து சரியான முடிவை வழங்குவது) ஆகும்.

ஐசிசியில் முழுமையான உறுப்பினர்கள் இடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் வரையிட்ட நிறைவுகள் கொண்ட பன்னாட்டுப் போட்டிகள் ஆகிய அனைத்திலும் மூன்றாவது நடுவர் கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்பது ஐசிசி விதியாகும்.

அண்மைக்காலப் போட்டிகளில் துடுப்பாட்ட சட்டங்கள் மற்றும் விளையாட்டில் பற்று ஆகியவற்றைப் பின்பற்றி வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்துவதற்கு, கள மற்றும் மூன்றாவது நடுவர்களைத் தவிர, ஆட்ட நடுவர் (match referee) என்ற ஒருவரும் இருக்கிறார். அவர் ஆடுகளதில் விளையாடும் வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்கீனமாக செயல்படும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் தவறு செய்யும் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட தடை போன்ற தீர்ப்புகளை வழங்குவார்.

விளையாடும் அணியின் அமைப்பு

ஒரு அணி என்பது பதினொரு வீரர்களைக் கொண்டுள்ளது. விளையாடும் வீரரின் முதன்மை திறன்களைப் பொறுத்து, ஒரு வீரரை மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளர் என்று வகைப்படுத்தலாம். நன்கு சமநிலையான அணியில் பொதுவாக ஐந்து அல்லது ஆறு சிறப்பு மட்டையாளர்கள் மற்றும் நான்கு அல்லது ஐந்து சிறப்பு பந்துவீச்சாளர்கள் இருப்பர். இவர்களுள், தனித்துவமான இலக்கு கவனிப்பாளர் ஒருவர் எப்போதும் அணியில் இருப்பார். ஒவ்வொரு அணியும் ஒரு அணித்தலைவரின் தலைமையில் வழிநடத்ப்படுகிறது, அவர் பந்துவீச்சு வரிசையை தீர்மானித்தல், களத்தடுப்பு வீரர்களுக்கான இடம் மற்றும் பந்து வீச்சாளர்களின் சுழற்சியை தீர்மானித்தல் போன்ற திறமையான முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்.

மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒரு வீரர் பன்முக வீரர் (All Rounder) என்று அழைக்கப்படுகிறார். ஒரு இலக்குக் கவனிப்பாளர் என்பவர் மட்டையாளராகவும் உள்ளதால் சில நேரங்களில் அவரும் ஒரு பன்முக ஆட்டக்காரர் என்று கருதப்படுகிறார். பெரும்பாலான வீரர்கள் மட்டைவீசுவது அல்லது பந்துவீசுவது ஆகிய திறமைகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பன்முக வீரர் என்பவர் ஒரு அணியில் மிகவும் அரிதானவராகவும் முக்கியமானவராகவும் உள்ளார்.

Remove ads

ஆட்ட வகைகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய போட்டியாகும். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் தலா இரு ஆட்டப் பகுதிகள் விளையாட வேண்டும். அந்த இரண்டையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி 15 மார்ச்சு 1787 நாளன்று இலண்டன் இலாட்சு மைதானத்தில் இங்கிலாந்து-ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்

ஒநாப

ஒருநாள் பன்னாட்டுப் போட்டி வகை 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் ஐம்பது நிறைவுளுக்கு மிகாமல் ஒரு ஆட்டப் பகுதியை ஆட வேண்டும். அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டி சனவரி 5, 1971 நாளன்று ஆத்திரேலியாவில் மெல்போன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இ20ப

பன்னாட்டு இருபது20 போட்டி வகை, இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் ஒவ்வொரு ஆட்டப் பகுதிகளைக் கொண்டிருப்பதோடு மட்டைவீசும் அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் வரை வழங்கப்படுகின்றது.

Remove ads

பன்னாட்டுக் கட்டமைப்பு

உறுப்பினர்கள்

முழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் நாடு, அணிகள் ...
நாடு அணிகள் ஆட்சிக் குழு உறுப்பினரான நாள் பகுதி தரவரிசை (ஆண்கள்) தரவரிசை (பெண்கள்)  ! colspan="3" |தரவரிசை (U19)
தேர்வு ஒநாப இ20ப பெஒநாப பெஇ20ப
 ஆப்கானித்தான் ஆண்கள் • பெண்கள் • U19 ஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம் 22 சூன் 2017 ஆசியா - 10 9
 ஆத்திரேலியா ஆண்கள் • பெண்கள் • U19 துடுப்பாட்டம் ஆத்திரேலியா 15 சூலை 1909[1] ஓசியானியா 2 4 2 1 1
 வங்காளதேசம் ஆண்கள் • பெண்கள் • U19 வங்காளதேசத் துடுப்பாட்ட அவை 26 சூன் 2000[1] ஆசியா 9 7 8 8 9
 இங்கிலாந்து ஆண்கள் • பெண்கள் • U19 இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் 15 சூலை 1909[1] ஐரோப்பா 4 1 1 3 2
 இந்தியா ஆண்கள் • பெண்கள் • U19 இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 31 மே 1926[1] ஆசியா 3 2 3 2 3
 அயர்லாந்து ஆண்கள் • பெண்கள் • U19 துடுப்பாட்டம் அயர்லாந்து 22 சூன் 2017 ஐரோப்பா - 11 11 10 10
 நியூசிலாந்து ஆண்கள் • பெண்கள் • U19 நியூசிலாந்து துடுப்பாட்டம் 31 மே 1926[1] ஓசியானியா 1 3 6 5 4
 பாக்கித்தான் ஆண்கள் • பெண்கள் • U19 பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 28 சூலை 1953[1] ஆசியா 7 6 4 7 7
 தென்னாப்பிரிக்கா ஆண்கள் • பெண்கள் • U19 தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டம் 15 சூலை 1909A[1] ஆப்பிரிக்கா 5 5 5 4 5
 இலங்கை ஆண்கள் • பெண்கள் • U19 இலங்கை துடுப்பாட்டம் 21 சூலை 1981[1] ஆசியா 6 8 7 9 8
 மேற்கிந்தியத் தீவுகள் ஆண்கள் • பெண்கள் • U19 துடுப்பாட்டம் மேற்கிந்தியத் தீவுகள் 31 மே 1926[1] அமெரிக்கா 8 9 10 6 6
 சிம்பாப்வே ஆண்கள் • பெண்கள் • U19 சிம்பாப்வே துடுப்பாட்டம் 6 சூலை 1992 ஆப்பிரிக்கா - 13 12 12
மூடு

Reference: ICC Men's Rankings, ICC Women's Rankings, 12 சனவரி 2021

இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுப்பினர்கள்

Thumb
ஐசிசி உறுப்பு நாடுகள்:
     தேர்வு உறுப்பினர்கள்
     இணை உறுப்பினர்கள்
     ஒருநாள் இணை உறுப்பினர்கள்
     முன்னாள் அல்லது நீக்கப்பட்ட உறுப்பினர்கள்

இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன:

மேலதிகத் தகவல்கள் நாடு, ஆட்சிக் குழு ...
நாடு ஆட்சிக் குழு உறுப்பினரான ஆண்டு தற்போதைய ஐசிசி ஒருநாள் தரம்
 கனடா கனேடியத் துடுப்பாட்டம் 1968[1] 16
 கென்யா கென்யா துடுப்பாட்டம் 1981[1] 13
 நெதர்லாந்து நெதர்லாந்து துடுப்பாட்ட வாரியம் 1966[1] 12
 இசுக்காட்லாந்து ஸ்காட்லாந்து துடுப்பாட்டம் 1994[1] 15
மூடு
Remove ads

உலகக்கிண்ணம் வென்ற அணிகள்

குறிப்பு: - உலகக் கோப்பை வென்ற அணி

துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்

துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு கனவான்களின் ஆட்டம் (Gentlemen's game) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads