1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...
1979 புருடென்சியல் உலகக்கிண்ணம்
Thumb
கிளைவ் லொயிட் வெற்றிக்கிண்ணத்துடன்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இங்கிலாந்து
வாகையாளர் மேற்கிந்தியத் தீவுகள் (2-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்15
வருகைப்பதிவு1,32,000 (8,800 per match)
அதிக ஓட்டங்கள்கோர்டன் கிரீனிச் (253)
அதிக வீழ்த்தல்கள்மைக் என்றிக் (10)
1975
1983
மூடு

பங்கேற்ற நாடுகள்

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கனடா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.[1]

பிரிவு ஏ

மேலதிகத் தகவல்கள் அணி, புள்ளிகள் ...
அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி முடிவில்லை ஓட்டவிகிதம்
 இங்கிலாந்து 1233003.07
 பாக்கித்தான் 832103.60
 ஆத்திரேலியா 431203.16
 கனடா 030301.60
மூடு
9 சூன் 1979
ஆத்திரேலியா  159/9 - 160/4  இங்கிலாந்துலோர்ட்ஸ், லண்டன்
9 சூன் 1979
கனடா  139/9 - 140/2  பாக்கித்தான்ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்
14 சூன் 1979
பாக்கித்தான்  286/7 - 197  ஆத்திரேலியாட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்
14 சூன் 1979
கனடா  45 - 46/2  இங்கிலாந்துபழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்
16 சூன் 1979
கனடா  105 - 106/3  ஆத்திரேலியாஎட்க்பாஸ்டன், பர்மிங்கம்
16 சூன் 1979
இங்கிலாந்து  165/9 - 151  பாக்கித்தான்ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்

பிரிவு பி

மேலதிகத் தகவல்கள் அணி, புள்ளிகள் ...
அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி முடிவில்லை ஓட்டவிகிதம்
 மேற்கிந்தியத் தீவுகள் 1032014.35
 நியூசிலாந்து 832104.43
 இலங்கை 631214.45
 இந்தியா 030302.78
மூடு
9 சூன் 1979
இந்தியா  190 - 194/1  மேற்கிந்தியத் தீவுகள்எட்க்பாஸ்டன், பர்மிங்கம்
9 சூன் 1979
இலங்கை  189 - 190/1  நியூசிலாந்துட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்
13 சூன் 1979
இலங்கை  முடிவில்லை  மேற்கிந்தியத் தீவுகள்ஓவல், லண்டன்
13 சூன் 1979
இந்தியா  182 - 183/2  நியூசிலாந்துஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்
18 சூன் 1979
இலங்கை  238/5 - 191  இந்தியாபழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்
16 சூன் 1979
மேற்கிந்தியத் தீவுகள்  244/7 - 212/9  நியூசிலாந்துட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்

வெளியேற்றச் சுற்று

  அரை இறுதி இறுதி
             
20 சூன் - இங்கிலாந்து பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்
 ஏ1 இங்கிலாந்து 221/8  
 பி2 நியூசிலாந்து 212/9  
 
23 சூன் - இங்கிலாந்து லோர்ட்ஸ், லண்டன்
      இங்கிலாந்து 194
    மேற்கிந்தியத் தீவுகள் 286/9
20 சூன் - இங்கிலாந்து ஓவல், லண்டன்
 பி1 மேற்கிந்தியத் தீவுகள் 293/6
 ஏ2 பாக்கித்தான் 250  

இறுதிப் போட்டி

இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிக்குப் புத்தூக்கத்தை வழங்கியது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.

1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

புதிய அணிகளின் நிலை

உலகக்கிண்ண போட்டித் தொடரில் முதன்முறையாகப் பங்கேற்றவை இலங்கை மற்றும் கனடா அணிகள். இலங்கை அணி இந்தியாவுக்கெதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 'ஓல்டட் டிரபல்ட்' மைதானத்தில் 47 ஓட்டங்களினால் இலங்கை அணி இவ்வெற்றியைப் பெற்றது. துலிப் மென்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடா அணி எந்த ஆட்டத்திலும் வெற்றியடையவில்லை.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.