மகர சங்கராந்தி
சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் From Wikipedia, the free encyclopedia
மகர சங்கராந்தி (Makar Sankranti) அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மகர சங்கராந்தி | |
---|---|
வண்ணமய பட்டங்கள் லக்னோ கடையொன்றில் விற்கப்படுதல் | |
அதிகாரப்பூர்வ பெயர் | மகர சங்கராந்தி |
பிற பெயர்(கள்) | சகாரத் |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள், இந்தியர்கள் |
வகை | காலநிலை, வழமை |
முக்கியத்துவம் | அறுவடை திருநாள், குளிர்கால கதிர்த்திருப்பம் |
கொண்டாட்டங்கள் | பட்டம் விடுதல் |
நாள் | சனவரி 14 |
தொன்மையான இப்பண்டிகை, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எனவும் இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.
வட்டார வழக்கங்கள்
சங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:
இந்தியாவில்
இந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா
- அறுவடை திருநாள் -குறிப்பாக தமிழ்நாட்டில் அறுவடை திருநாள் அல்லது தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி என்பது குறிப்பிட்ட வகை மக்கள் இந்த பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடுகின்றனர்.
- உத்தராயண்- குசராத் மற்றும் இராசத்தான்
- லோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்
- மகர ஜோதி - சபரிமலை,கேரளம்
பிற நாடுகளில்
- நேபாளம்
- தாரு மக்கள்- மாகி
- பிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி
- தாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்
- லாவோஸ் - பி மா லாவ்
- மியான்மர் - திங்க்யான்
- இலங்கை - பொங்கல் பண்டிகை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.