போஸ் வெங்கட்

நடிகர் From Wikipedia, the free encyclopedia

போஸ் வெங்கட்

போஸ் வெங்கட் (Bose Venkat) என்பவர் தமிழ்த் திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் போஸ் வெங்கட் நாய்டு, பிறப்பு ...
போஸ் வெங்கட் நாய்டு
Thumb
பிறப்புஜெ. வெங்கடேசன் நாய்டு
4 பெப்ரவரி 1976 (1976-02-04) (அகவை 49)
தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
அரசியல் கட்சிதி. மு. க
வாழ்க்கைத்
துணை
சோனியா
(m.2003–தற்போது வரை)
பிள்ளைகள்தேஜஸ்வின், பவதாரணி
மூடு

சொந்த வாழ்க்கை

இவர் நடிகை சோனியாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு தேஜஸ்வின் எனும் மகனும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.[2]

தொழில் வாழ்க்கை

தனது பதினேழாவது அகவையில் சென்னையில் குடியேறினார். தொடக்ககாலத்தில் கலைத்துறையில் வாய்ப்பு கிடைக்காமல் தானுந்து ஓட்டியாகப் பணிபுரிந்துள்ளார். மெட்டி ஒலி தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நடித்தார்.[3] இவர் சிவாஜி, மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வயதினிலே, கவண் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், மம்முட்டி, திலீப் உடன் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னி மாடம் எனும் திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனரானார்.[4][5]  

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.