From Wikipedia, the free encyclopedia
போல் போட் (Pol Pot, போல் பாட், பிறப்பு சலோத் சார், மே 19, 1928[1][2] - ஏப்ரல் 15, 1998) முன்னாள் கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். 1970களில் தொடங்கப்பட்ட சிவப்பு கெமர் இயக்கத்தின் தலைவராக இருந்து 1976 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருக்கும் பொழுது அதிகாரபூர்வமாக பல கம்போடிய மக்களால் கூட்டு வேளாண்மையிலும் வதை முகாம்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த நிகழ்வில் கம்போடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 26% உயிரிழந்தனர்.
சலோத் சார் "போல் போட்" | |
---|---|
1977இல் போல் போட் | |
கம்போடியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1963–1979 | |
முன்னையவர் | து சமூத் |
பின்னவர் | இல்லை (கட்சி நீக்கப்பட்டது) |
கம்போடியப் பிரதமர் | |
பதவியில் மே 13, 1975 – சனவரி 7, 1979 | |
முன்னையவர் | கியு சம்ஃபன் |
பின்னவர் | பென் சொவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கம்பொங் தும் மாகாணம், கம்போடியா | மே 19, 1928
இறப்பு | ஏப்ரல் 15, 1998 69) கம்போடியா | (அகவை
அரசியல் கட்சி | சிவப்பு கெமர் |
துணைவர்(கள்) | கியு பொன்னரி (இறந்தார்) மிய சொன் |
1979 இல் வியட்நாம் படையெடுத்து சிவப்பு கெமர் அரசு முடிந்துவிட்டது. போல் போட் அகற்றி தென்மேற்கு கம்போடியக் காட்டுக்கு தப்பிவிட்டார். 1989இல் வியட்நாம் கம்போடியாவிலிருந்து பின்வாங்கி போல் போட் திரும்பவும் கம்போடியா சென்று புதிய கம்போடிய அரசுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளார். 1997 இல் இவர் கைது செய்யப்பட்டு இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.