From Wikipedia, the free encyclopedia
பைத்தடி மாவட்டம் (Baitadi District) (நேபாளி: बैतडी जिल्लाⓘ), தூர மேற்கு நேபாளத்தின் நேபாள மாநில எண் 7-இல் அமைந்த ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தசரதசந்த் (Dasharathchand) நகரம் ஆகும்.
இம்மாவட்டம் 1,519 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,50,898 ஆகும். இதில் பெண்கள் 1,33,491 ஆக உள்ளனர். [1]இம்மாவட்டத்தில் குமாவானி மொழி அதிகம் பேசப்படுகிறது. நேபாளத்தின் தூர மேற்கில் அமைந்த பைத்தடி மாவட்டத்தின் மேற்கு பகுதி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாகக் கொண்டுள்ளது.
இம்மாவட்டம் 56 கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும் கொண்டது.
நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர்கள் | 13.1% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 71.2% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 15.7% |
சோளம், கோதுகை முக்கியப் பயிர்கள் ஆகும். வீட்டுப் பயன்பாட்டிற்கு நெல், தானியங்கள், பழங்கள் பயிரிடப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.