From Wikipedia, the free encyclopedia
பெர்னாமா (மலாய்: Berita Nasional Malaysia; ஆங்கில மொழி: Malaysian National News Agency) என்பது மலேசிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனம். மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வருகிறது. 1967-ஆம் ஆண்டில் ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அதன் பணிகள் 1968 மே 26இல் தொடங்கின.
![]() | |
வகை | அரசு நிறுவனம் |
---|---|
தலைமையகம் | விஸ்மா பெர்னாமா, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர், மலேசியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | செய்தி ஊடகம் |
உற்பத்திகள் | ஊடகச் சேவை |
உரிமையாளர்கள் | மலேசிய அரசாங்கம் |
பணியாளர் | 700 (2022) |
தாய் நிறுவனம் | மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு |
பெரித்தா நேசனல் மலேசியா எனும் மலாய்ச் சொற்களின் சுருக்கம்தான் பெர்னாமா (BERNAMA). இந்தச் செய்தி நிறுவனத்தை மலேசிய அரசாங்கம் நடத்தி வருவதால் அதன் செய்திகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வலது சாரித் தன்மை உடையதாகவும்; அரசு சார்பு கொண்டதாகவும் உள்ளன பரவலாக அறியப்படுகிறது. உலகம் முழுமையும் இந்த நிறுவனத்திற்கு 300-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் நிருபர்களும் உள்ளனர்.[1]
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் சாலையில், மலேசிய தேசிய நூலகத்திற்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பெர்னாமா மாளிகையில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. மலேசியாவின் எல்லா மாநிலங்களிலும் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.
ஜகார்த்தா, சிங்கப்பூர், புது டில்லி, பாங்காக், பெய்ஜிங், டுபாய் ஆகிய நகரங்களில் நிரந்தரமான செய்தியாளர்கள் உள்ளனர். வாஷிங்டன், மெல்பர்ன், லண்டன், மணிலா, டாக்கா, வான்கூவர் ஆகிய நகரங்களில் நிருபர்கள் உள்ளனர். மலேசியாவின் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் பெர்னாமாவின் சந்தாதாரர்களாக உள்ளன.
1998 செப்டம்பர் மாதம் பெர்னாமா தனது ஒலி - ஒளி ஊடகச் சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 24 மணி நேர வானொலி, தொலைக்காட்சி செய்திச் சேவையை மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில், ஆஸ்ட்ரோ 502வது ஒளி அலைவரிசையில் வழங்கி வருகிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.