பெர்டினாண்ட் மோனயர் (9 மே 1836 – 11 ஜூலை 1912)[1] ஒரு பிரஞ்சு கண்சிகிச்சை நிபுணராக அறியப்படுகிறார்.  இவர் வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் டையாப்ட்டர் எனும் அலகை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2] மோனயர் விளக்கப்படம் எனும் பார்வைத் திறனைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அட்டவணையையும் கண்டுபிடித்தார்.[3]

Thumb
மோனயர் விளக்கப்படம். மேல் மற்றும் கீழாக இரு முனைகளிலும் அவரின் பெயர் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது. (கடைசி வரி தவிர்த்து), அவரின் பெயர் "பெர்டினாண்ட் மோனயர் " "Ferdinand Monoyer" காணலாம்
விரைவான உண்மைகள் Ferdinand Monoyer, பிறப்பு ...
Ferdinand Monoyer
Thumb
பிறப்பு(1836-05-09)9 மே 1836
லியோன், பிரான்சு
இறப்பு11 சூலை 1912(1912-07-11) (அகவை 76)
லியோன், பிரான்சு
தேசியம்French
பணிகண் மருத்துவர்
மூடு

வரலாறு

பெர்டினாண்ட் மோனயரின் தாயார் அல்சாடியன் மரபு வழியினர் ஆவார். அவரது தந்தை ஒரு பிரஞ்சு இராணுவ மருத்துவர்.[4]

மரணம்

பெர்டினாண்ட் மோனயர்  தம் 76 வயதில் மரணம் அடைந்தார். அவரது சமாதி Cimetière de la Guillotière எனும் இடத்தில் அமைந்துள்ளது இது  லியோன் எனும் நகரில் உள்ளது.

மரபு

பெர்டினாண்ட் மோனயரைப் பற்றிய தகவல், கூகிளின் முகப்புப் பக்கத்தில் உள்ள டூடிளில் (Doodle) அவரின் 181 ஆவது பிறந்த நாளான 9 மே 2017 அன்று அவரைக் கெளரவிப்பதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.