இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனந்தபுரம், இரணைப்பாலை, கோம்பாவில், மல்லிகைத்தீவு, மாணிக்கபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மண்ணாங்கண்டல், மந்துவில், சிவநகர், சுதந்திரபுரம், தேராவில், தேவிபுரம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம், வள்ளுவர்புரம், விசுவமடு கிழக்கு, விசுவமடு மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இப்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கிலும், தெற்கிலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவும்; கிழக்கில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, என்பனவும் எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 1009 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].
Seamless Wikipedia browsing. On steroids.