பி. டி. உஷா (மலையாளம்: പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷ, Pilavullakandi Thekkeparambil Usha) (பிறப்பு சூன் 27, 1964) என பரவலாக அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2022 திசம்பர் 10 ஆம் நாள் அன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

விரைவான உண்மைகள் பி. டி. உஷா, பிறப்பு ...
பி. டி. உஷா
Thumb
பிறப்புபிலாவுள்ளகண்டி தெக்கெப் பரம்பில் உஷா[1]
27 சூன் 1964 (1964-06-27) (அகவை 59)
பய்யோலி, கோழிக்கோடு, கேரளம், இந்தியா
இருப்பிடம்பய்யோலி, கோழிக்கோடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பய்யோலி எக்ஸ்பிரஸ், தங்க மகள்
பணிதடகள விளையாட்டாளர்
பணியகம்இந்திய இரயில்வே
அறியப்படுவதுபத்மசிறீ
பெற்றோர்பைத்தல், இலட்சுமி
வாழ்க்கைத்
துணை
வி. சீனிவாசன்
பிள்ளைகள்உஜ்வல்
வலைத்தளம்
ptusha.org
மூடு
விரைவான உண்மைகள் பதக்க சாதனைகள், பெண்கள் தட களம் ...
பதக்க சாதனைகள்
பெண்கள் தட களம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1982 புது தில்லி100 மீட்டர்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1982 புது தில்லி200 மீட்டர்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம்1986 சியோல்200 மீட்டர்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம்1986 சியோல்400 மீட்டர்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம்1986 சியோல்400 மீட்டர்கள் தடைகள்
தங்கப் பதக்கம் – முதலிடம்1986 சியோல்4x400 மீட்டர்கள் அஞ்சல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1986 சியோல்100 மீட்டர்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1990 பீஜிங்400 மீட்டர்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1990 பீஜிங்4x100 மீட்டர்கள் அஞ்சல்
மூடு

டாக்டர் பட்டம்

இவருக்கு கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் சனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[4]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.