Remove ads
From Wikipedia, the free encyclopedia
பிலிப்பைன்–அமெரிக்கப் போர் என்பது (பிலிப்பினோ/தகலாகு: Digmaang Pilipino-Amerikano) (1899–1902)[1] ஐக்கிய அமெரிக்காவிற்கும் பிலிப்பினோ புரட்சியாளர்களுக்கும் இடையிலான ஆயுதமேந்திய முரண்பாடு ஆகும்.
1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் எசுப்பானியா இத்தீவுகளை, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது.[2] அப்போது புதிதாக முளைவிட்டுப் பெருகிச்சென்ற முதல் பிலிப்பைன்ஸ் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.