பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)
நகரம் From Wikipedia, the free encyclopedia
நகரம் From Wikipedia, the free encyclopedia
பிலாசுப்பூர்[3] (ஆங்கிலம் - Bilaspur, Himachal Pradesh)என்ற நகரம், இந்திய மாநிலமான இமாசலப் பிரதேசத்தின், பிலாஸ்ப்பூர் மாவட்டத்திலுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2208 அடிகள் உயரமுடையதாக உள்ளது. கோடைகாலத்தில் வெயில் கடுமையாகவும், குளிர்காலத்தில் பனி அதிகமாகவும் இருக்கும் காலநிலைச்சூழலைப் பெற்றிருக்கிறது.
பிலாசுப்பூர் | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 31°20′N 76°45′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | இமாசலப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) | ||||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1] | ||||||
முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு[2] | ||||||
Zonal Headquarters | |||||||
மக்களவைத் தொகுதி | பிலாசுப்பூர் | ||||||
மக்கள் தொகை | 13,058(13th) (2005[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 673 மீட்டர்கள் (2,208 அடி) | ||||||
குறியீடுகள்
|
சத்லெச்சு ஆறும், கோபிந்து சாகர் (Gobind Sagar) அணையும் இங்கு இருக்கிறது.ஒவ்வொரு வருடமும், அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அணை நிரம்பி காணப்படும். அதனால், அம்மாவட்ட சுற்றுலாத் துறையினர் பல்வேறு நீர்சறுக்கு விளையாட்டுகளை நிகழ்த்துவர். இதன் மக்கள் தொகை , 2005 கணக்கின்படி, 13058 ஆகும்.[4] அதில் 50.07% ஆண்கள், 49.93%. பெண்கள் அடங்குவர்.
7 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர், தலைநகராக திகழ்ந்தது. இதனை காலுர்(Kahlur) என்றும் அழைப்பர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்த ஊர், பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது.1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அக்டோபர் 12 ஆம் நாளன்று, 1948 ஆம் ஆண்டுஇதனை ஆண்ட அரசர் (ler, HH Raja Sir Anand Chand) ,இந்திய அரசோடு, தன் நிலப்பகுதிகளை இணைத்தார். இந்திய தலைமை ஆளுநரால் இது தனிமாநிலமாக சூலை1ஆம் நாளன்று,1954 ஆம் வருடத்தில் இருந்தது.பின்னர், இந்திய நாடளுமன்றத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டப்பகுதியாக அறிவிக்கப்ப்பட்டது. கோபிந்து சாகர் அணை உருவாக்கலின் போது, இந்த பண்டைய ஊர், சத்லஜ் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் அருகே இந்த புதிய நகரம் உருவானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.