புவெனஸ் ஐரிஸ் (Buenos Aires) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் "நிதானமான காற்று" அல்லது "நல்ல காற்றுகள்" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.பெல்கிரானோ மற்றும் ப்லோரெஸ் நகரங்களை உள்ளடக்கிய நகர எல்லைகளை கொண்டுள்ளது;இப்போது இரு நகரங்களும் புவெனஸ் ஐரிஸ் நகரின் சுற்றுப்புறங்களாக உள்ளது.1994 அரசியலமைப்பு திருத்தம் புவெனஸ் ஐரிஸ் நகரத்திற்கு சுயாட்சியை வழங்கியது, அதன் உத்தியோகபூர்வ பெயர்: சியுடாட் ஆட்டோனோமா டி புவெனஸ் எயர்ஸ் (புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்). புவெனஸ் ஐரிஸ் ஒரு 'ஆல்பா நகரம்' என்று அழைக்கப்படுகிறது. 'வாழ்க்கை தரத்தில் உலக நகரங்களில் 81 வது இடத்தை புவெனஸ் ஐரிஸ் பெற்றது.புவெனஸ் ஐரிஸ் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் பாதுகாக்கப்பட்ட ஸ்பானிஷ் / ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார வாழ்க்கைக்கு பெயர்போன ஊர் புவெனஸ் ஐரிஸ். புவெனஸ் ஐரிஸ் 1951 ஆம் ஆண்டில் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டையும், 1978 FIFA உலகக் கோப்பையில் இரண்டு இடங்களையும் வழங்கியது. 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2018 G20 உச்சிமாநாடு ஆகியவை புவெனஸ் ஐரிஸ் நகரத்தில் நடக்கவுள்ளது.
புவெனஸ் ஐரிஸ்
Buenos Aires Ciudad Autónoma de Buenos Aires புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): Reina del Plata (பிளாட்டா ஆற்றின் அரசி) | |
தோற்றம் | 1536, 1580 |
அரசு | |
• தலைவர் | மவுரீசியோ மாச்ரி |
பரப்பளவு | |
• நகரம் | 203 km2 (78.5 sq mi) |
• நிலம் | 203 km2 (78.5 sq mi) |
• மாநகரம் | 4,758 km2 (1,837 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 30,34,161 |
• அடர்த்தி | 14,946.6/km2 (38,712/sq mi) |
• பெருநகர் | 1,30,44,800 |
ம.வ.சு. (2005) | 0.923 – உயர் |
இணையதளம் | http://www.buenosaires.gov.ar/ (எசுப்பானியம்) |
மக்கள் தொகை
மக்கள்தொகை கணக்கெடுப்பு
2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,891,082 பேர் இந்நகரத்தில் வசிக்கின்றனர். 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் மட்டும் மக்கள் தொகை 13,147,638 ஆகும்.இந்நகரின் முக்கிய பகுதிகளில் சதுர கிலோமீட்டருக்கு 13,680 மக்கள் (சதுர மைல்களுக்கு 34,800) மக்கள்தொகை அடர்த்தி உள்ளது. ஆனால் புறநகர்ப்பகுதிகளில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 2,400 (சதுர மைலுக்கு 6,100) மட்டுமாகவே உள்ளது.புவெனஸ் ஐரிஸின் மக்கள்தொகை 1947 ஆம் ஆண்டிலிருந்து 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளுக்கு மெதுவாக இடம்பெயர்வு ஆகியவையே காரணங்களாக பாவிக்கப்படுகிறது.நகரின் குடியிருப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 30% ஒற்றை குடும்ப வீடுகளில் வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
அர்ஜென்டினாவின் நிதி, தொழில்துறை மற்றும் வர்த்தக மையமாக புவெனஸ் ஐரிஸ் நகரம் உள்ளது. மெட்ரோ புவெனஸ் ஐரிஸ், ஒரு நன்கு அறியப்பட்ட ஆய்வின் படி, உலக நகரங்களில் 13 வது பெரிய பொருளாதார நகரமாக உள்ளது.
துறைமுகம்
புவெனஸ் ஐரிஸ் துறைமுகம் தென் அமெரிக்காவில் உள்ள பரபரப்பான துறைமுகத்தில் ஒன்றாகும்; ரியோ டி லா ப்ளாடாவின் வழியே செல்லும் ஆறுகள் வடகிழக்கு அர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே மற்றும் பராகுவே ஆகியவையுடன் இத்துறைமுகத்தை இணைக்கின்றன.புவனோஸ் ஏரிஸ் துறைமுகம் ஆண்டுதோறும் 11 மில்லியன் வருவாய் டன்களை கையாள்கிறது, நகரத்தின் தெற்கே தென்பகுதியிலுள்ள டோக் சூடு மற்றொரு 17 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கையாள்கிறது. துறைமுகத்துடன் தொடர்புடைய வரி கடந்த காலத்தில் பல அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது, இதில் மோதல் 2008 அன்று, ஏற்றுமதி வரிகளை உயர்த்தியபின், விவசாயத் துறையில் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது.
சேவைகள்
நகரின் சேவைத் துறை சர்வதேச தரத்தினால் பல்வகைப்படுத்தப்பட்டு நன்கு வளர்ந்திருக்கிறது மற்றும் அதன் பொருளாதாரம் 76% (அர்ஜென்டினாவின் 59% உடன் ஒப்பிடுகையில்).விளம்பரம், குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் சேவைகளின் ஏற்றுமதிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள் துறை மிகப்பெரியதாகும், மேலும் நகரத்தின் பொருளாதாரத்தில் 31% பங்களிப்பு இதனுடையதே ஆகும்.
புவியியல்
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், Buenos Aires Central Observatory (2001–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.4 (86.7) |
29.0 (84.2) |
26.8 (80.2) |
23.4 (74.1) |
19.3 (66.7) |
16.6 (61.9) |
16.0 (60.8) |
17.7 (63.9) |
19.6 (67.3) |
23.1 (73.6) |
26.1 (79) |
28.5 (83.3) |
23.0 (73.4) |
தினசரி சராசரி °C (°F) | 25.1 (77.2) |
23.9 (75) |
22.0 (71.6) |
18.0 (64.4) |
14.4 (57.9) |
11.9 (53.4) |
11.4 (52.5) |
12.8 (55) |
14.8 (58.6) |
18.2 (64.8) |
20.9 (69.6) |
23.2 (73.8) |
18.1 (64.6) |
தாழ் சராசரி °C (°F) | 20.2 (68.4) |
19.5 (67.1) |
18.0 (64.4) |
13.6 (56.5) |
10.5 (50.9) |
8.3 (46.9) |
7.7 (45.9) |
8.7 (47.7) |
10.6 (51.1) |
13.5 (56.3) |
16.0 (60.8) |
18.2 (64.8) |
13.7 (56.7) |
பொழிவு mm (inches) | 167.5 (6.594) |
171.0 (6.732) |
172.3 (6.783) |
110.8 (4.362) |
72.3 (2.846) |
54.8 (2.157) |
70.0 (2.756) |
71.7 (2.823) |
75.0 (2.953) |
124.4 (4.898) |
114.1 (4.492) |
102.4 (4.031) |
1,306.3 (51.429) |
% ஈரப்பதம் | 65 | 70 | 72 | 77 | 78 | 79 | 79 | 74 | 71 | 69 | 68 | 64 | 72 |
சராசரி பொழிவு நாட்கள் | 9.5 | 9.0 | 10.0 | 7.9 | 6.6 | 7.1 | 8.0 | 7.7 | 7.9 | 9.9 | 9.9 | 9.1 | 102.6 |
சூரியஒளி நேரம் | 275.9 | 217.5 | 210.8 | 183.0 | 167.4 | 144.0 | 148.8 | 167.4 | 180.0 | 220.1 | 252.0 | 272.8 | 2,439.7 |
Source #1: University of Buenos Aires[1] | |||||||||||||
Source #2: Servicio Meteorológico Nacional (humidity 1981–1990)[2] |
Climate data for Buenos Aires | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Month | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec | Year |
Mean daily daylight hours | 14.0 | 13.0 | 12.0 | 11.0 | 10.0 | 10.0 | 10.0 | 11.0 | 12.0 | 13.0 | 14.0 | 14.0 | 12.0 |
Average Ultraviolet index | 11+ | 11 | 9 | 6 | 3 | 2 | 2 | 4 | 6 | 8 | 10 | 11+ | 6.9 |
Source: Weather Atlas [3] |
மினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம்
மினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம், ஈஜீசா சர்வதேச விமான நிலையம் எனவும் அறியப்படுகிறது. இது உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் உள்ள ஈஜீசா பர்டிடோவில் அமைந்துள்ளது இந்த சர்வதேச விமான நிலையம்.இது 22 கிலோமீட்டர் (14 மைல்) அர்ஜென்டீனாவின் தலைநகரான புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும், இது அர்ஜென்டினாவில் 85% சர்வதேச போக்குவரத்தை கையாளுகிறது. 2007 ஆம் ஆண்டில் ஸ்கைட்ராக்ஸால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மினெஸ்ட்ரோ பிஸ்டினரினி விமான நிலையம் "இப்பகுதியில் உள்ள 2007ன் சிறந்த விமான நிலையம்" என வாக்களித்தது.இது 2010 ஆம் ஆண்டில் கோமொடோரோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.
விளையாட்டு
கால்பந்து அர்ஜென்டீனாவின் மக்களுக்கான ஒரு உற்சாகமான விளையாட்டாகும்.உலகத்தின் எந்த நகரத்தினையும் விட அதிகமான கால்பந்து அணிகளைக் கொன்டது (24 தொழில்முறை கால்பந்து அணிகள் மேலே) புவெனஸ் ஐரிஸ், இதன் பல அணிகளும் முக்கிய லீக்கில் விளையாடி வருகின்றன. போகா ஜூனியர்ஸ் அணி மற்றும் ரிவர் ப்ளேட் அணி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி இங்கு மிகவும் சிறப்புவாய்ந்த போட்டியாக அர்ஜென்டீனியர்கள் கருதுகின்றனர், இந்த போட்டியை "சூப்பர் கிளாசிகோ" என்று அழைக்கப்படுகிறது. தி ஒப்சேவர் எனும் ஆங்கில செய்தி தாள் வெளியிட்ட ஓர் செய்தி: "நீங்கள் இறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 50 விளையாட்டு பற்றிய விஷயங்களில் ஒன்று" இந்த இரு அணிகளுக்கிடையில் நடக்கும் ஒரு போட்டியைக் காண்பது. கால்பந்ந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, புவெனஸ் ஐரிஸின் தெற்கில் அமைந்துள்ள லானுஸ் பார்டிடோவில் பிறந்தார், எல்லா காலத்திலும் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக பரவலாக புகழப்படுகிறார் மரடோனா.அர்ஜென்டினா தொழில்முறை குத்துச்சண்டைகளில் பல புகழ்பெற்ற உலக சாம்பியன்களுக்கான சொந்த நாடு.இந்நாட்டில் இந்நகரில் பிறந்த கார்லோஸ் மோன்ஸன் உலக புகழ்பெற்ற மிடில்வெயிட் சாம்பியனாக இருந்தார்.தற்போதைய உலக மிடில்வெயிட் சாம்பியன் செர்ஜியோ மார்டினெஸ் அர்ஜென்டினாவில் இருந்து வந்தவ்ர் ஆவார். செர்கியோ மார்டினெஸ், ஒமர் நார்வாஸ், லூகாஸ் மத்தீஸ், கரோலினா டூர், மற்றும் மார்கோஸ் மெய்டனா ஆகிய ஐந்து நவீன-உலகத்தின் குத்துச்சண்டை சாம்பியன்களும் அர்ஜென்டினாவை சொந்த நாடாக கொண்டவர்கள்.புவெனஸ் ஐரிஸ் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டுக்களை (1951) நடத்தியது மற்றும் பல உலக சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அவை:1950 மற்றும் 1990 கூடைப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப், 1982 மற்றும் 2002 ஆண்கள் கைப்பந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் மறக்கமுடியாத 1978 ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டி எஸ்டடியோ மோனூமண்டல் அரங்கில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 25 ஜூன் 1978 இல் நடைபெற்றது. அர்ஜென்டினா நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஃபிஃபா உலக கோப்பையை வெண்றது.இந்நாட்டைச் சார்ந்த ஜுவான் மானுவல் ஃபாங்கியோ ஐந்து ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அர்ஜெண்டினாவில் முதல் ரக்பி யூனியன் போட்டியானது 1873 ஆம் ஆண்டில் புவெனஸ் ஐரிஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் விளையாடப்பட்டது. ரகுபி புவெனஸ் ஐரிஸில் பரவலாக புகழ் பெற்றுள்ளது, குறிப்பாக நகரத்தின் வடக்கில். இந்த பகுதிக்கு சொந்தமான எண்பதுக்கும் மேற்பட்ட ரக்பி கிளப்கள் உள்ளன.
திரையரங்கு
ப்யூனோஸ் எயர்ஸில் 280 க்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்டுள்ளது. இது உலகில் மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு திரையரங்குகளைக் கொண்டுள்ளதால் உலக திரையரங்குகளின் தலைநகரென வர்ணிக்கப்படுகிறது.நகரின் திரையரங்குகளில் இசை, பாலே நடனம், நகைச்சுவை மற்றும் சர்க்கஸ்கள் ஆகியவற்றிலிருந்து எல்லாவற்றையும் காட்டுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.