பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள தோடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலக்காடு சந்திப்பு (முன்னர் ஒலவக்கோடு சந்திப்பு) (நிலைய குறியீடு: PGT[1]) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-2 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[3] இது கேரளத்தின், பாலக்காட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது கேரளத்தில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாகும். தூய்மை இந்தியா இயக்கம் நடத்திய கணக்கெடுப்பு ஆய்வின்படி, பாலக்காடு சந்திப்பு கேரள மாநிலத்தின் தூய்மையான தொடருந்து நிலையம் ஆகும்.[4] பாலக்காடு சந்திப்பு கேரளத்தின் பாலக்காடு நகரின் முக்கிய தொடருந்து நிலையமாகவும், பாலக்காடு நகரத்தில் உள்ள நகர தொடருந்து நிலையத்துக்கு அடுத்து இரண்டாம் நிலை தொடருந்து நிலையமாகவும் செயல்படுகிறது.[5]
Remove ads
Remove ads
அமைவிடம்

இந்த நிலையமானது பாலக்காடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. பாலக்காடு நகரின் புறநகர் பகுதியான ஒலவக்கோடு, பாலக்காட்டை கோழிக்கோடுடன் இணைக்கும் 966 எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்.[6]
Remove ads
பாதைகள்
பாலக்காடு சந்திப்பானது ஜோலார்பேட்டை-ஷோறனூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும் பாலக்காடு–மதுரை பாதையின் ஒரு நிறுத்தமாகவும் உள்ளது. இந்த நகரத்திற்கு சேவை செய்யும் மற்றொரு நிலையமாக பாலக்காடு நகர தொடருந்து நிலையம் உள்ளது.
உள்கட்டமைப்பு
இந்த நிலையமானது ஐந்து நடைமேடைகளைக் கொண்டுள்ளது. 1, 2, 3 ஆகிய நடைமேடைகள் பாலக்காடு நகரம், ஷொர்ணூர், திருச்சூர் நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 4, 5 நடைமேடைகள் முதன்மையாக சென்னை நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மெமு கொட்டகை
மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் மெமு மெமு கொட்டகை புறநகர் தொடருந்துகளைப் பராமரிப்பதற்காக உள்ளது. மேலும் இது மாநிலத்தின் முதல் மெமு கொட்டகை ஆகும்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads