Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அச்சரப்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள பாபுராயன்பேட்டை எனும் கிராமத்தில் உள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.[1]
ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12.387550°N 79.733800°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தட்சிண காஞ்சி ( தென் காஞ்சி ), நத்தப்பாளையம் |
பெயர்: | ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பாபுராயன்பேட்டை |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் (நின்ற திருக்கோலம்) |
தாயார்: | ஸ்ரீ விஜயவல்லித் தாயார் |
தொலைபேசி எண்: | 9791124816 / 9444334686 |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 75 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°23'15.2"N, 79°44'01.7"E (அதாவது, 12.387550°N, 79.733800°E) ஆகும்.
கிருஷ்ணா பண்டிதர் எனும் பக்தர் காஞ்சி வரதராஜபெருமாளின் சீரிய பக்தர். இவர் திவானாக இருந்து வந்தார். இவரது மகனான பாபுராயன் தந்தையைப் போன்றே பெருமாளிடம் பக்தியுடன் திகழ்ந்தார். காஞ்சி வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளின் தரிசனம் காண்பதைத் தவறாத பழக்கமாகக் கொண்டிருத்த இவர் ஒரு நாள் வீட்டில் வழிபாடு முடிந்து வர தாமதமாகவே பெருமாளைத் தரிசனம் செய்ய இயலாமல் போக வருந்தி உண்ணாமல் நீரருந்தாமல் உபவாசம் இருந்தார்.
மூன்றாம் நாள் பாபுராயனின் கனவில் வந்த வரதராஜ பெருமாள் தெற்கில் தமக்கு ஒரு திருக்கோயில் அமைக்கும் திருப்பணியைத் தந்து, அங்கிருந்து தினமும் தரிசனம் தருவதாக உறுதி கூறினார். மறுநாள் மீண்டும் கனவில் நாளை இங்கு வரும் கருடனைத் தொடர்ந்து பின் செல்ல கோயில் கட்டும் இடத்தைக் காணலாம் எனக் கூற அதன்படி அடையாளம் காணப்பட்டு விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட திருத்தலமே பாபுராயன்பேட்டை ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில்.
பாபுராயன், காடாக இருந்த இடத்தை மாற்றியமைத்த போது அங்கே புற்று ஒன்றில் பசு தானாகவே பால் சொரிவது கண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து நிலத்தை அகழ அங்கே இரு ஆஞ்சநேயர் சிலைகள் வெளிப்பட்டன.
காஞ்சி வரதராஜபெருமாள் ஆண்டுக்கொருமுறை இங்கு எழுந்தருள்வது வழக்கம்.[2]
ஐந்து கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் கொண்டு சிறப்புற்றிருந்த கோயில் கவனிப்பின்மையால் காலப்போக்கில் சிதிலமடைந்தது. 2013 ஆம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக்குழு பக்தர்களாலும் கிராமத்தாராலும் துவக்கப்பட்டது. A case was filed in the Madras High Court vide W.P. 9692 OF 2020- by Advocate B.Jagannath, and the Learned Division Bench of the Hon'ble Madras High Court was pleased to Order the Construction and Kumbabishekam of the temple within 12 weeks. There was no response - hence contempt is pending at the High Court.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.