மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பாசிர் பூத்தே மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh District; சீனம்: 巴西富地县; ஜாவி: ڤاسير ڤوتيه;) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பாசிர் பூத்தே எனும் பெயரில் ஒரு நகரமும் உள்ளது. மலேசிய மக்களவைத் தொகுதியின் பெயரும் பாசிர் பூத்தே.
பாசிர் பூத்தே | |
---|---|
Pasir Puteh District | |
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 5°50′N 102°24′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | பாசிர் பூத்தே மாவட்டம் |
தொகுதி | பாசிர் பூத்தே |
உள்ளூராட்சி | பாசிர் பூத்தே ஊராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அப்துல் பத்தா அசுபுல்லா[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 433.8 km2 (167.5 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,17,383 |
அஞ்சல் குறியீடு | 16xxx |
தொலைபேசி எண்கள் | +6-09 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே சமயத்தில் பாசிர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது.
இந்த நகரம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் சுல்தான் நான்காம் முகமது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் பெயரைப் பெற்றது.
செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே என்று அறிவித்தார். பாசீர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள்.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1991 | 96,348 | — |
2000 | 1,04,404 | +8.4% |
2010 | 1,13,191 | +8.4% |
2020 | 1,36,157 | +20.3% |
ஆதாரம்: [3] |
2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி பாசிர் பூத்தே மாவட்டத்தின் மக்கள்தொகை 136157. பெரும்பான்மையினர் கிளாந்தான் மலாய் மக்கள்.
நிலை | மாவட்டம்/முக்கிம் | மக்கள் தொகை 2000 |
---|---|---|
1 | செமராக் | 21,670 |
2 | புக்கிட் ஜாவா | 19,329 |
3 | லிம்போங்கான் | 14,164 |
4 | பாடாங் பாக் அமாட் | 13,360 |
5 | புக்கிட் அபால் | 10,624 |
6 | கோங் டத்தோ | 8,721 |
7 | ஜெராம் | 8,552 |
8 | புக்கிட் அவாங் | 7,984 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.