பாங்காக் தேசிய அருங்காட்சியகம் ( தாய் மொழி: พิพิธภัณฑสถานแห่งชาติ พระนคร,RTGS) தாய்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களின் முக்கிய கிளை அருங்காட்சியகமாகும். மேலும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.[1] இது தாய்லாந்தின் கலை மற்றும் வரலாற்றின் காட்சிப் பொருள்களைக் கொண்டுள்ளது. இது தம்மசாத் பல்கலைக்கழகத்திற்கும், தேசிய அரங்கத்திற்கும் இடையில் அமைக்கப்பட்ட துணை மன்னரின் (அல்லது முன்னணி அரண்மனை ) முன்னாள் அரண்மனையை ஆக்கிரமித்துள்ளது, இது சனம் லுவாங்கிற்கு எதிர் பக்கத்தில் அமைந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
தேசிய அருங்காட்சியகம், பாங்காக்
พิพิธภัณฑสถานแห่งชาติ พระนคร
Thumb
Thumb
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 19, 1874 (1874-09-19)
அமைவிடம்ப்ரா நேகான், பாங்காக்
இயக்குனர்நிடாயா கானோக்மோங்கால்
வலைத்தளம்finearts.go.th/museumbangkok/
மூடு
Thumb
பாங்காக் தேசிய அருங்காட்சியகம்
Thumb
8 ஆம் நூற்றாண்டின் வெண்கல உடல் சிலை போதிசத்துவ பத்மபாணி, ஸ்ரீவிஜயன் கலை, சாயா, சூரத் தானி, தெற்கு தாய்லாந்து, மத்திய ஜாவா ( சைலேந்திரன் ) கலை செல்வாக்கை நிரூபிக்கிறது.

அரசர் ராமா IV இன் ஆட்சியின் நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருட்டு 1874 ஆம் ஆண்டில் மன்னர் V ராமாவால் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. இன்று பார்வையகங்களில் தாய்லாந்தின் வரலாற்றை கற்கால காலத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன. இந்தத் தொகுப்பில் கிங் ராம் காம்ஹெங் கல்வெட்டு உள்ளது, இது யுனெஸ்கோவின் உலகத்தின் நினைவுகள் திட்டத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது.[3]

துவாரவதி, ஸ்ரீவிஜயா, சுகோதாய் மற்றும் ஆயுதயா காலங்கள் வரையிலான தாய் கலைப்பொருட்களைப் பாதுகாத்து காண்பிப்பதைத் தவிர, மண்டல ஆசிய புத்த கலைகளான இந்திய காந்தாரா, சீன டாங், வியட்நாமிய சாம், இந்தோனேசிய ஜாவா மற்றும் கம்போடிய கெமர் கலைகளின் விரிவான தொகுப்புகளையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது.

ஏப்ரல் 2019 இன்படி, அருங்காட்சியகம் அதன் கண்காட்சி அறைகளை ஒரு தசாப்த காலமாக புதுப்பிக்கும் முடிவை நெருங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டு அரங்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் நான்கு அரங்குகள் புதுப்பிக்கப்படும். அனைத்துப் பகுதியும் புதிய உட்புறங்கள், சிறந்த விளக்குகள் மற்றும் கணினி உதவி பல் ஊடகக் காட்சிகளுடன் கிடைக்கும்.[4]

வரலாறு

பாங்காக் தேசிய அருங்காட்சியகம் முதலில் அவரது தந்தை கிங் ராமா IV (மோங்க்குட்) இன் பழங்காலத் தொகுப்பைச் சுற்றி கிங் ராமாவால் நிறுவப்பட்டது. தேசிய அருங்காட்சியகமானது முன்னாள் வாங் நாவில் துணை மன்னருக்காகக் கட்டப்பட்ட முன்பக்க அரண்மனையில் இருந்தது. துணை மன்னர் என்பவர் அடுத்த பட்டத்து இளவரசன்(தாய்லாந்திற்கு அரச வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான தனித்த சட்டம் இல்லை. அரசர் பாரம்பரியமாக தனது சொந்த வாரிசு என்று மகனைக் காட்டிலும் தனது சகோதரரையே அறிவிப்பது வழக்கமாக இருந்தது). இந்த பதவி ராமா IV ஆல் அகற்றப்பட்டதுடன் தேசிய அருங்காட்சியகமானது 1887ஆம் ஆண்டில் முன்னாள் அரண்மனையில் அமைக்கப்பட்டது.[5]

1874 ஆம் ஆண்டில், மன்னர் ராமா IV, பேரரண்மனைக்குள் கான்கார்டியா பெவிலியனில் முதல் பொது அருங்காட்சியகத்தை நிறுவ உத்தரவிட்டார். கான்கோரிடியா அருங்காட்சியகம் 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. தாய்லாந்தின் நுண்கலைத்துறை இந்த நாளை தாய்லாந்தின் முதல் தேசிய அருங்காட்சியத்தின் பிறந்த நாள் என குறிப்பிட்டது.

1887 ஆம் ஆண்டில், அரசர் ராமா V அருங்காட்சியத்தை கான்கார்டிவிலிருந்து முற்பக்க அரண்மனைக்கு மாற்றினார். இதன் பிறகு இந்த அருங்காட்சியகம் வாங் நா அருங்காட்சியகம் அல்லது முற்பக்க அரண்மனை அருங்காட்சியகம் என அழைக்கப்பட்டது.

1926 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியம் பாங்காக் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டடது. மேலும், இந்த அருங்காட்சியகம் 1934 ஆம் ஆண்டில் தாய்லாந்தின் நுண்கலைத்துறையின் இயக்கத்தின் கீழ் வந்த போது பாங்காக்கின் தேசிய அருங்காட்சியமாக வளர்ச்சியடைந்தது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.