From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 (International Year of Chemistry 2011) என்பது வேதியியல் தந்த மாந்தரின மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக 2011 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்ட ஓர் அறிவியல் விழாவாகும்.[1] இந்த வேதியியல் ஆண்டைக் கொண்டாட பன்னாட்டவை 2008ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை பன்னாட்டு தூய, பயன்முறை வேதியியல் ஒன்றியம், யுனெசுக்கோ ஆகிய இரு அமைப்புகளும் ஒருங்கிணைத்தன.[2][3]
பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 சார்ந்த ஐநா தீர்மானத்தை எத்தியோப்பியா அனுப்பியது. இதில் 23 நாடுகள் இணைப் புரவலராகச் செயல்பட்டன. தீர்மானத்தில் பன்னாட்டவை நீடிப்புதிற வளர்ச்சிப் பத்தாண்டு 2005-14 எனும் திட்ட இலக்குகளை அடைவதற்கு வேதியியல் பெரும் பங்காற்றுவது சுட்டிக் காட்டப்பட்டது.
"வேதியியல்-நம் வாழ்வும் எதிர்காலமும்" என்ற கருப்பொருள் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011இன் கொண்டாட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டது. கொண்டாட்ட மையம் “மாந்தரின நல்வாழ்விற்கு வேதியியலின் பெறுமதிகளும் பங்களிப்புகளும்” என்பதில் குவியலானது.[1] இது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைய தலைமுறையினரை இப்புலத்திபால் ஈர்க்கவும் புவிக்கோளகச் சிக்கல்களைத் தீர்ப்பதில் வேதியியலின் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும் முனைந்தது.[4]
பன்னாட்டு வேதியியல் ஆண்டின் கொண்டாட்டங்களை உலக நாடுகளின் வேதியியல் சார்ந்த கழகங்கள் ஒருங்கிணைத்தன. எடுத்துகாட்டாக, அமெரிக்க வேதியியல் குமுகம், வேதியியலுக்கான வேந்திய சங்கம், பிரேசில் வேதியியல் கழகம், வேதியியல் தொழிற்கழகம், ஆத்திரேலிய அரசு வேதியியல் நிறுவனம், ஐரோப்பிய வேதியியல், மூலக்கூற்று அறிவியல் கழகம், ஆப்பிரிக்க வேதியியல் கழகங்களின் கூட்டமைப்பு போன்றவை விழாவில் முனைவாக ஈடுபட்டன.[5][6][7][8]
பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) 25 தனிப்பெரும் பங்களிப்பு ஆற்றிய மகளிர் வேதியியல், வேதிப்பொறியியல் அறிஞர்களை விருது வழங்கத் தேர்வு செய்தது.[9] இவர்களில் இசுரவேலைச் சேர்ந்த அடா யோனத், தாய்லாந்தைச் சேர்ந்த சுலபோர்ன் வலாக், பெரும்பிரித்தனைச் சேர்ந்த இலெசுலே யெல்லோலீ, அமெரிக்க ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த யோவான்னா எஸ். பௌலர் ஆகியோர் சிலராவர்.
பன்னாட்டு வேதியியல் ஆண்டு வலைத்தளத்தில் நிகழ்ச்சிகளின் முழுப்பட்டியலையும் இட்டுவைத்துள்ளது.[10] திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பேராயங்கள், மாநாடுகள், விழாக்கல், பொருட்காட்சிகள், படக் காட்சிகள், grand openings,விரிவுரைகள், கூட்டங்கள், திறந்த அரங்கு விவாதங்கள், பணியரங்குகள், கொண்டாட்டங்கள், திரைப்படங்கள், கலைக்காட்சிகள், புதிர்கள் எனப் பட்டியல் இடப்பட்டுள்ளன.
பன்னாட்டு வேதியியல் ஆண்டின் நிறைவு விழா 2011 டிசம்பர் 1ஆம் நாளன்று பெல்ஜியம், பிரசெல்சு நகரில் கொண்டாடப்பட்டது.[10]
யுனெசுக்கோவின் பாரிசு தலைமையகத்தில் 2011 சனவரி 27-28 ஆகிய நாட்களில் பன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவல்முறைத் தொடக்க விழா நிறைவேற்றப்பட்டது. இதில் 60 நாடுகளில் இருந்துவந்த 1000+ பேராளர்கள் பங்குபற்றினர். நான்கு நோபெல் பரிசாளர்கள் வந்திருந்தனர். யுனஸ்கோ பொது இயக்குநர் இரீனா பொகோவா தொடக்க விழாவில் உரையாற்றினார்.[11]
பன்னாட்டு வேதியியல் ஆண்டை பதிவுசெய்ய சுவிசு அஞ்சல் துறை உயிர்ச்சத்து சி மூலக்கூற்றின் படிமத்தை அஞ்சல்தலையாக வெளியிட்டது. இந்த உயிர்ச்சத்து-சி மூலக்கூற்றை முதன்முதலாக சுவிசு வேதியியலார் தடெயசு ரீச்ஸ்ட்டீன் 1933இல் தொகுத்தார்.[12]
ஆயிரமாண்டுத் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்டுள்ள வேதியியல் பங்களிப்புகளை அரசு வேதியியல் கழகம்]] மீள்பார்வையிடுவதன் வாயிலாகப் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 விழாவைக் கொண்டாடியது.[13]
பன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவலக நிகழ்ச்சியாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக மரபுச்சின்னப் பட்டியலில் உள்ள லார்டு ஓவ் தீவில் ஆகத்து 14-18 ஆகிய நாட்களில் ”புவிக்கோளகச் செயற்கை ஒளிச்சேர்க்கை: ஆற்றல், மீநுண்வேதியியல், ஆளுகையும்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.[14]
கனடா வேதியியல் ஆண்டுக்காக பல செயல்விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதில் கனடாவைச் சேர்ந்த 32 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.[15] டல்கவுசி பல்கலைக்கழகம் 2011 மே 7ஆம் நாளன்று ”வேதியியல் ஊர்வல”த்துக்கு ஏற்பாடு செய்தது. இதில் வேதி ஆய்வகமும் உணவும் செயல்விளக்கங்களோடு சுற்றுலா வந்தன.[16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.