இஸ்ரேலில் உள்ள பாலைவனம் From Wikipedia, the free encyclopedia
நெகேவ் (Negev; எபிரேயம்: הַנֶּגֶב, [Tiberian vocalization]: han-Néḡeḇ , அரபு மொழி: النقب an-Naqab) என்பது தென் இசுரேல் பிரதேசத்திலுள்ள ஒரு பாலைவனமும் மித வறட்சியான பாலைவனமும் ஆகும். இப்பிரதேசத்தில் பெரிய நகரமும் நிருவாகத் தலைநகரமுமாக பொசபே (மக்கள் தொகை 196,000) வடக்கில் உள்ளது. இதன் தென் முனையில் அக்காபா குடாவும் ஏலாத் நகரும் அமைந்துள்ளன. இங்கு சில வளர்ச்சியடைந்த நகரங்களான டிமோனா, ஆராத், மிட்ஸ்பே ரமென் என்பனவும், சிறிய நகர்களாக பெடுயின் நகர்களான ராகட், டெல் அஸ்சபி ஆகியவையும் காணப்படுகின்றன. இங்கு சில கிபுட்ஸ் எனப்படும் பிரிவுகள் காணப்படுகின்றன. இப்பகுதி இசுரேலின் முதலாவது பிரதமரான டேவிட் பென்-குரியன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்ந்த வசிப்பிடமாகவும் விளங்கியது.
இப்பாலைவனம் நெகேவ் பென்-குரியன் பல்கலைக்கழகத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாலைவனம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒக்டோபர் 2012 இல், உலக பயண வழிகாட்டி வெளியீட்டாளர் "லோன்லி பிளானட்", நெகேவ் பாலைவனத்தை அதன் வளர்ச்சியூடான தற்போதைய மாற்றத்தைக் குறிப்பிட்டு, 2013 இற்கான உலகின் முதல் பத்து பிராந்திய பயண இலக்குகள் பட்டியலில் இரண்டாவதாக மதிப்பிடப்பட்டது.[1][2]
நெகேவ் எனும் மூலச் சொல் எபிரேய வேர்ச் சொல்லாகிய 'வறட்சி' என்பதில் இருந்து பெறப்பட்டது. விவிலியத்தில், "நெகேவ்" எனும் சொல் தெற்குத் திசையைக் குறிக்கப் பயன்பட்டது. சில ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் "நெகேப்" ("Negeb") எனவும் குறிப்பிடுகின்றன.
அராபியில், நெகேவ் என்பது அல்-நகப் அல்லது அன்-நகப் ("மலைக் கடவை"),[3][4] என அழைக்கப்பட்டாலும், இதற்கு அராபிய பெயர்ப் பாரம்பரியம் இல்லை. அத்துடன் 19 ஆம் நூற்றாண்டு வரை எகிப்திய-உதுமானிய எல்லைப்புறமாக இது முக்கிய பகுதியாக காணப்படவில்லை.[5]
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், இப்பகுதி பெர்சபே துணை மாவட்டம் என அழைக்கப்பட்டது.[5]
நெகேவ் பகுதி வறண்டதும் (ஏலாத் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 31 மிமி மழையைப் பெறுகிறது), சகாராவின் கிழக்கில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த மழையையே பெறுகிறது. 31 பாகை வடக்கில் இருப்பதால் மிகவும் கூடிய வெப்பநிலை இங்கு உள்ளது. சூன் முதல் ஒக்டோபர் வரையான வழமையான மழைவீழ்ச்சி பூச்சியமாகும்.[6]
தட்பவெப்ப நிலைத் தகவல், பெர்சபே | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28.4 (83.1) |
31 (88) |
35.4 (95.7) |
40.9 (105.6) |
46 (115) |
41.5 (106.7) |
40.5 (104.9) |
41.2 (106.2) |
39.6 (103.3) |
34 (93) |
31.4 (88.5) |
46 (115) | |
உயர் சராசரி °C (°F) | 16.7 (62.1) |
17.5 (63.5) |
20.1 (68.2) |
25.8 (78.4) |
31.3 (88.3) |
32.7 (90.9) |
32.8 (91) |
31.3 (88.3) |
28.5 (83.3) |
23.5 (74.3) |
18.8 (65.8) |
25.7 (78.3) | |
தாழ் சராசரி °C (°F) | 7.5 (45.5) |
7.6 (45.7) |
9.3 (48.7) |
12.7 (54.9) |
18.4 (65.1) |
20.5 (68.9) |
20.9 (69.6) |
19.5 (67.1) |
16.7 (62.1) |
12.6 (54.7) |
8.9 (48) |
14.2 (57.6) | |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -5 (23) |
-0.5 (31.1) |
2.4 (36.3) |
4 (39) |
13.6 (56.5) |
15.8 (60.4) |
15.6 (60.1) |
13 (55) |
10.2 (50.4) |
3.4 (38.1) |
3 (37) |
−5 (23) | |
பொழிவு mm (inches) | 49.6 (1.953) |
40.4 (1.591) |
30.7 (1.209) |
12.9 (0.508) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0.4 (0.016) |
5.8 (0.228) |
19.7 (0.776) |
41.9 (1.65) |
204.1 (8.035) | |
சராசரி பொழிவு நாட்கள் | 9.2 | 8 | 6.4 | 2.6 | 0 | 0 | 0 | 0.1 | 1.8 | 4.6 | 7.5 | 41 | |
ஆதாரம்: Israel Meteorological Service[7][8] |
நெகேவ்வில் நாடோடி வாழ்க்கை குறைந்தது 4,000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது.[9] 7,000 வருடங்கள் வரைக்கும் எனலாம்.[10] முதலாவது நகர்மயமான குடியேற்றங்கள் கிட்டத்தட்ட கி.மு. 2000 களில் கானானியர் அமலேக்கியர், ஏதோமியர் ஆகிய குழுக்களின் இணைவு மூலம் நிறுவப்பட்டன.[9] கி.மு. 1400 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்ட காலத்தில் நெகேவ், சினாய் தீபகற்பம் ஆகிய இடங்களில் எகிப்து பார்வோன் செப்பு சுரங்க அறிமுகம், உருக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.[9][11]
தொடக்க நூல் அதிகாரம் 13 இன்படி, எகிப்தைவிட்டு வெளியேறியதும் ஆபிரகாம் சில காலம் நெகேவில் வாழ்ந்தார்.[12] வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிய யாத்திரையில், மோசே 12 உளவாளிகளை நெகேவிற்கு அனுப்பி நிலத்தையும் மக்களையும் அறிந்துவர அனுப்பினார்.[13] பின்னர் வட நெகேவ் யூத கோத்திரத்தினால் வாழிடமாக்கப்பட்ட, தெற்கு சிமியோன் கோத்திரத்தாரால் வாழிடமாக்கப்பட்டது. நெகேவ் சாலமோன் அரசின் பகுதியாகவும் பின்னபு யூத அரசின் பகுதியாகவும் விளங்கியது.[14]
கி.மு. 9 ஆம் நூற்றாண்டில், நெகேவிலும் ஏதோமிலும் (தற்போதைய யோர்தான்) சுரங்கம் தோண்டுதல் வளர்ச்சியுற்று, விரிவடைந்து அசிரியா எழுச்சியினால் அப்பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன.[9] கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பெர்சபே அப்பகுதியின் தலைநகராகவும் வாணிபத்தின் மையமாகவும் விளங்கியது[9] கி.மு. 1020 முதல் 926 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிய இசுரயேலர் குடியிருப்புக்கள் அப்பகுதியின் தலைநகரைச் சுற்றி இருந்தன.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.