சாம்பல் தலை தாழைக்கோழி அல்லது மயில்கால் கோழி அல்லது சேமன்கோழி (Western swamphen) என்பது கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து தெற்கு சீனா மற்றும் வடக்கு தாய்லாந்து வரை உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள இனமாகும். இது நீலத் தாழைக் கோழியின் கிளையினமாகக் கருதப்பட்டது, ஆனால் 2015 இல் தனி இனம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இன்று நீலத் தாழைக் கோழி ஒரு மிகையினமாகக் கருதப்படுகிறது. மேலும் இதன் ஆறு கிளையினக் குழுக்களில் ஒவ்வொன்றும் தனி இனங்களாக கருதப்படுகின்றன.[1]

விரைவான உண்மைகள் நீலத்தாழைக்கோழி அல்லது சேமன் கோழி, காப்பு நிலை ...
நீலத்தாழைக்கோழி அல்லது சேமன் கோழி
Thumb
ஆண்
Thumb
பெண்
இரண்டும், வேம்பநாட்டு ஏரி, கேரளம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Porphyrio
இனம்:
P. porphyrio
இருசொற் பெயரீடு
Porphyrio porphyrio
L, 1758
மூடு
Thumb
Porphyrio poliocephalus

1990 களின் பிற்பகுதியில், புளோரிடாவின் பெம்ப்ரோக் பைன்சில் உள்ள பறவை வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்தன் காரணமாக, சாம்பல் தலை தாழைக்கோழி வட அமெரிக்காவிற்கு அறிமுகமானது. மாநில வனவிலங்கு உயிரியலாளர்கள் இந்தப் பறவைகளை அழிக்க முயன்றனர், ஆனால் இவை பெருகிவிட்டன. இப்போது தெற்கு புளோரிடாவின் பல பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பறவையியல் அதிகாரிகள் இந்தப் பறவைகள் வாழும் முக்கியப் பகுதியாக புளோரிடாவின் அவிஃபானா மாறும் என்று கருதுகின்றனர்.[2] இது பிப்ரவரி 2013 இல் அமெரிக்க பறவைகள் சங்கத்தின் சரிபார்ப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[3]

வகைபிரித்தல்

போர்பிரியோ பேரினத்தைச் சேர்ந்த 15 இனங்களில் சாம்பல் தலை தாழைக்கோழி ஒன்றாகும். இது 2015 ஆம் ஆண்டு வரை நீலத் தாழைக்கோழியின் கிளையினமாக வகைப்படுத்தப்பட்டது. அப்போது ஊதா தாழைக்கோழி இனங்கள் குழு ஆறு இனங்களாக பிரிக்கப்பட்டது.

துணையினங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.