நிக்கலாய் நசுக்கோவ்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ் (Nikolai Ivanovich Noskov, உருசியம்: Никола́й Ива́нович Носко́в, பிறப்பு: 12 சனவரி 1956) ஒரு சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர், இசையமைப்பாளர் ஆவார். சலத்தோய் கிராமபோன் (தமிழில்: பொன் கிராமபோன்) எனும் இசைக்கான பிரபலமான உருசிய விருதை ஐந்து தடவைகள் பெற்றிருந்தார்.[1][2][3][4], ரஷ்ய கூட்டமைப்பின் புகழ்பெற்ற கலைஞர்[5].
நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ் | |
---|---|
நிக்கலாய் நசுக்கோவ், 2009 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ் |
பிறப்பு | 12 சனவரி 1956 ககாரின், கசாத்சுக், உருசியா, சோவியத் ஒன்றியம் |
இசை வடிவங்கள் | கிளாம் ராக், கிளாம் மெட்டல், கடின ராக், புது அலை, பரப்பிசை, ரி&பு, வன்கு இசை, வன்கு ராக், folk, கிராமிய ராக், |
தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கித்தார் |
இசைத்துறையில் | 1981–இன்று |
இணையதளம் | nnoskov |
நிக்கலாய் 12 சனவரி 1956 ஆம் ஆண்டில் கிசாட்ஸ்க் எனும் (தற்போது ககாரின் எனப்பெயர் மாற்றப்பட்ட) ஊரில் பிறந்தார். இவரது தந்தை இவான் அலெக்சாந்த்ரோவிச் பிறப்பால் உரோமா (உருசியம்: ட்சிகானி) இனக்குழுவைச் சார்ந்தவர். நிக்கலாய் எனும் உருசியப் பெயர் செல்லமாக கோலியா என்று அழைக்கப்படுவதுண்டு. நிக்கலாயின் சிறுவயதுப் பருவத்தில் மரபார்ந்த இசைக்கருவிகளைக் கொண்டு நாடோடிப் பாடல்களைத் தனது தாய் பாடும் போது இசைக்கத் தொடங்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.