From Wikipedia, the free encyclopedia
நாவற்குழியூர் நடராஜன் (30 சூன் 1919 – 17 பெப்ரவரி 1994) எனப்படும் கலாநிதி க. செ. நடராசா இலங்கைத் தமிழ் அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.[1] இவர் இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.[2]
க. செ. நடராசா | |
---|---|
பிறப்பு | க. செ. நடராசா 30 சூன் 1919 நாவற்குழி, யாழ்ப்பாணம் |
இறப்பு | 17 பெப்ரவரி 1994 74) ஸ்கார்பரோ, கனடா | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | நாவற்குழியூர் நடராசன் |
கல்வி | கலாநிதி (கொழும்புப் பல்கலைக்கழகம்]]) |
பணி | வானொலிப் பணிப்பாளர் |
அறியப்படுவது | கவிஞர், தமிழறிஞர் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | கனகசபை செல்லப்பா, அன்னம்மா |
வாழ்க்கைத் துணை | தங்கராணி நவரத்தினம் |
பிள்ளைகள் | 2 |
கனகசபை செல்லப்பா நடராசா யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழி என்ற ஊரில் செல்லப்பா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் வையாபாடல் என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலாநிதி பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் வரதருடன் இணைந்து மறுமலர்ச்சி சங்கத்தை நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
நடராசன் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் சானாவின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் இலங்கை வானொலியில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 சிலம்பொலி என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களாக ஒலிபரப்பாயின.[2]
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.[2] தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் கனடாவில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.[2] கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.