நாரி சக்தி விருது (Nari Shakti Puraskar) ("பெண் சக்தி விருது") என்பது இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் விருதாகும்.[1] இந்த விருதுகளை அனைத்துலக பெண்கள் நாள் அன்று (மார்ச் 8) புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1999இல் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் என்ற தலைப்பில் நிறுவப்பட்டு 2015ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன. ஆறு நிறுவனப் பிரிவுகளிலும் இரண்டு தனிப்பட்ட பிரிவுகளிலும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இவை முறையே இரண்டு இலட்சம் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன.[2]
நாரி சக்தி விருது | |
---|---|
2019இல் விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் | |
விருது வழங்குவதற்கான காரணம் | பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான விதிவிலக்கான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருது |
இதை வழங்குவோர் | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு |
முன்பு அழைக்கப்பட்டது பெயர் | ஸ்திரீ சக்தி புரஸ்கார் |
வெகுமதி(கள்) | ₹ 1-2 இலட்சம் |
முதலில் வழங்கப்பட்டது | 1999 |
இணையதளம் | Nari Shakti Puraskar |
நாரி சக்தி விருதுகள் ஆறு நிறுவனப் பிரிவுகளிலும், தனிப்பட்ட பெண்களுக்கு இரண்டு பிரிவுகளிலும் வழங்கப்படுகிறது. [1]
நிறுவனப் பிரிவுகள்
ஆறு நிறுவன வகைகளில் ஒவ்வொன்றுக்கும் இந்திய வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சிறந்த பெண்ணின் பெயரிடப்பட்டது.[1]
- பெண்களின் நல்வாழ்வையும் நலனையும் மேம்படுத்துவதில் சிறந்த தனியார் துறை அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கான அகில்யாபாய் ஓல்கர் விருது. மால்வா, இராச்சியத்தின் 18 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான அகில்யாபாய் ஓல்கரின் பெயரிடப்பட்டது.
- சிறுவர் பாலியல் விகிதத்தை (சி.எஸ்.ஆர்) கணிசமாக மேம்படுத்தும் சிறந்த மாநிலத்திற்கான கண்ணகி தேவி விருது. தமிழ்க் காவியமான சிலப்பதிகாரத்தின் மைய கதாபாத்திரமான கண்ணகியின் பெயரிடப்பட்டது.
- பெண்களுக்கு சேவைகள் மற்றும் வசதிகளை வழங்கிய சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கான மாதா ஜிஜாபாய் விருது. 17ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேரரசை நிறுவிய சிவாஜியின் தாயார் மாதா ஜிஜாபாய் பெயரிடப்பட்டது.
- பெண்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக சிறப்பான பணிகளைச் செய்யும் ஒரு குடிமை சமூக அமைப்புக்கு (சி.எஸ்.ஓ) இராணி காய்தின்லியு ஜெலியாங் விருது வழங்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் நாகா ஆன்மீக மற்றும் அரசியல் தலைவரான ராணி காயிதின்ல்யு பெயரிடப்பட்டது
- பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செயல்படும் சிறந்த நிறுவனத்திற்கு இராணி லட்சுமி பாய் விருது வழங்கப்படுகிறது. 1857ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கிளர்ச்சியின் முன்னணி நபர்களில் ஒருவரான ஜான்சியின் இராணியான இராணி லட்சுமிபாயின் பெயரிடப்பட்டது.
- பெண்கள் நலத்துறையில் பணியாற்றும் இரண்டு மாவட்டப் பேரூராட்சிகளுக்கும், இரண்டு கிராம ஊராட்சிகளுக்கும் இராணி ருத்ராம்மா தேவி விருதுகள் வழங்கப்படுகின்றது. குறிப்பாக பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பானவை. 13ஆம் நூற்றாண்டின் தக்காணப் பீடபூமியின் ஆட்சியாளரான [[ருத்திரமாதேவி[[யின் பெயரிடப்பட்டது.
தனிப்பட்ட பிரிவுகள்
- தைரியம் மற்றும் துணிச்சலுக்கான விருது
- பெண்கள் முயற்சி, சமூகப் பணிகள், அல்லது ஒரு வித்தியாசம் அல்லது பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்புகளை வழங்குவதற்கான விருதுகள்
நாரி சக்தி விருகளுக்கான முன்னோடி ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் 1999இல் நிறுவப்பட்டது. இது ₹ 100,000 மற்றும் ஒரு சான்றுடன் வழங்கப்பட்டது. நாரி சக்தி விருது போன்ற அதே ஆறு பிரிவுகளில் ஸ்த்ரீ சக்தி புரஸ்காரும் வழங்கப்பட்டது.[5] [6]
2021 விருது வழங்கும் விழா 2022ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வெற்றியாளர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர்[7]
- சத்துபதி பிரசன்ன ஸ்ரீ
- டேஜ் ரீட்டா தாகே
- மதுலிகா ராம்தேகே
- நிரஞ்சனாபென் முகுல்பாய் கலார்த்தி
- பூஜா சர்மா (தொழில்முனைவோர்)
- அன்ஷுல் மல்ஹோத்ரா
- ஷோபா காஸ்தி
- இராதிகா மேனன்
- கமல் கும்பர்
- சுருதி மொஹபத்ரா
- படூல் பேகம்
- தாரா ரங்கசாமி
- நீரஜா மாதவ்
- நீனா குப்தா
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.