இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
நானா சாகிப் (Nana Sahib) (பிறப்பு: 19 மே 1824 – கானாமல் போது 1857), பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு எதிராக நடந்த 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். பித்தூரை தலைமயிடமாகக் கொண்டு மராத்திய அரசை நடத்தியவர். நானா சாகிப், மராத்திய பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் பிள்ளையாவர். 1857 சிப்பாய்க் கிளர்சிக்குப் பின் பிரித்தானிய இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டார்.
நானா சாகிப் | |
---|---|
பிறப்பு | 19 மே 1824 பித்தூர் |
காணாமல்போனது | 1857 கான்பூர், கம்பெனி ஆட்சி |
பட்டம் | பேஷ்வா |
முன்னிருந்தவர் | இரண்டாம் பாஜி ராவ் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | நாராயணன் பட் - கங்கா பாய் |
நாராயணன் பட் - கங்கா பாய் இணையருக்கு பித்தூரில் 19 மே 1824இல் பிறந்த நானா சாகிப்பின் இயற்பெயர் நானா கோவிந்த் தோந்து பந்த் ஆகும்[1]
மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம், பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் பேரரசு தோற்றது. பாஜி ராவை பிரித்தானிய கம்பெனி ஆட்சி, கான்பூர் அருகே உள்ள பித்தூரில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கியது.
நானா சாகிப்பின் பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் பித்தூருக்கு புலம் பெயர்ந்தனர். பித்தூரின் இரண்டாம் பாஜி ராவ் பேஷ்வா, 1827ஆம் ஆண்டில் நானா சாகிப்பை தத்து எடுத்து வளர்த்தார்.[2] நானா சாகிப் சிறு வயதில் ராணி இலட்சுமி பாய், தாந்தியா தோப், அஷி முல்லா கான் ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
கிழக்கிந்தியா கம்பெனி அரசின் கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற இந்திய அரசுகளை பிரித்தானிய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியது.[3] அவகாசியிலிக் கொள்கையின்படி ஆட்சி இழந்த அரசுகள் சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், பகத், நாக்பூர், ஜான்சி ஆகும். மேலும் சரியாக ஆட்சி செய்யாத அவத் அரசையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியதால், கம்பெனி ஆட்சிக்கு நான்கு மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் வருவாய் கிடைத்தது. பித்தூர் அரசர் இரண்டாம் பாஜி ராவின் மறைவிற்குப் பின், அவருக்கு ஆண்டு ஓய்வூதியமாக கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஆண்டிற்கு 80, 000 பவுண்டு ஸ்டெர்லிங் வழங்கி வந்ததை நிறுத்தியது.
6 சூன் 1857இல் நானாசாகிப் தலைமையிலான 15 ஆயிரம் சிப்பாய்கள் கொண்ட படைகள்[4], கான்பூரில் இருந்த கிழக்கிந்திய இராணுவத்தின் ஒரு பெரும் படையை மூன்று வாரங்கள் முற்றுயிட்டது. படைக்கலன்களையும், செல்வத்தையும் கொள்ளையடித்து பின் தில்லியின் இரண்டாம் பகதூர் ஷா படைகளுடன் இணைந்து நின்று கிழக்கிந்திய இராணுவத்துடன் போரிட்டது.[5] போரில் பல ஆங்கிலேயே மக்கள் நானா சாகிப் படைகளால் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேயே படைத்தலவன் வீலர், நானா சாகிப்பிடம் சரண் அடைந்தான். பிறகு ஆங்கிலேயே பொது மக்கள் விடுவிக்கப்பட்டனர். 27 சூன் 1857 அன்று வீலர் கான்பூரை விட்டு அலகாபாத்திற்கு அகன்றான்.
16 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவத்தினர் பெரும் படையுடன் திரும்பி, நானா சாகிப் கைவசமிருந்த கான்பூரை மீட்டனர். பின்னர் பித்தூர் சென்று அங்கிருந்த வீடுகளை எரித்தும், செல்வங்களை கொள்ளை கொண்டும், மக்களையும் கொன்றனர். [5][6]
கான்பூரை ஆங்கிலேயர்களிடம் இழந்த நானா சாகிப் தலைமறைவானார். நானா சாகிப்பின் படைத்தலைவர் தாந்தியா தோபே கான்பூரை முற்றுகையிட்டு வெற்றி பெற்றும், இரண்டாம் கான்பூர் போரில் ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தார். நானா சாகிப் நேபாளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.