நாகர்கோவில் மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
நாகர்கோவில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதியதாக உருவாகிய தொகுதி கன்னியாகுமரி. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர். புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.[1][2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
2008 தேர்தலில் இத்தொகுதியானது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2004 தேர்தல் முடிவு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | A.V.பெல்லார்மின் | 410,091 | 60.87% | n/a | |
பா.ஜ.க | P.இராதாகிருஷ்ணன் | 245,797 | 36.48 | -12.94 | |
வாக்கு வித்தியாசம் | 164,294 | 24.39% | +0.97 | ||
பதிவான வாக்குகள் | 673,716 | 60.69 | +1.90 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
உசாத்துணை
- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.