From Wikipedia, the free encyclopedia
நம்கியால் வம்சம் (Namgyal dynasty), லே நகரத்தை தலைமையிடாகக் கொண்டு லடாக் மற்றும் அதனை சுற்றிய பிரதேசங்களை 1460 முதல் 1842 முடிய ஆண்டது.[1]இதே காலப்பகுதியில் சோக்கியால் வம்சத்தினர் சிக்கிம் இராச்சியத்தை ஆண்டனர். முன்னர் லடாக்கை ஆண்ட மர்யூல் வம்சத்தவர்களை (930–1460) வென்று நம்கியால் வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். நம்கியால் பேரரசு உச்சத்தில் இருந்த போது லடாக், பல்திஸ்தான், மேற்கு திபெத், மற்றும் மேற்கு நேபாளப் பகுதிகளை ஆண்டனர். நம்கியால் வம்சத்தினர் முகலாயர்கள் மற்றும் திபெத்தியர்களுடன் கடும் மோதல் போக்கு கொண்டிருந்தனர். இதனால் திபெத்-லடாக்-முகலாயப் போர்கள் நடைபெற்றது.[2]இறுதியாக 1842ல் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மற்றும் சீக்கியப் பேரரசினர் நம்கியால் வம்சத்தினரை வென்று லடாக் பகுதியை ஜம்மு காஷ்மீருடன் இணைத்தனர்.
லடாக்கின் நம்கியால் வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1460 | –1842|||||||||||
தலைநகரம் | லே | ||||||||||
பேசப்படும் மொழிகள் | லடாக்கிய மொழி, திபெத்திய மொழி | ||||||||||
சமயம் | திபெத்திய பௌத்தம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1460 | ||||||||||
• முடிவு | 1842 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | லடாக், இந்தியா திபெத் பல்திஸ்தான் நேபாளம் |
நம்கியால் வம்ச ஆட்சியாளர்கள் பட்டியல் பின்வருமாறு:[3][4][5]
Seamless Wikipedia browsing. On steroids.