From Wikipedia, the free encyclopedia
லே அரண்மனை (Leh Palace) இமயமலை யில் உள்ள லே நகரத்தில் அமைந்துள்ளது. இது திபெத்தின் லாசா நகரத்தில் உள்ள பொடாலா அரண்மனையின் மாதிரியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் செங்கி நாம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டோர்கா படைகள் இந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததும் இந்த அரண்மனை கைவிடப்பட்டு அரச குடும்பம் ஸ்டாக் அரண்மனைக்கு இடம்பெயர்ந்தது.
![]() |
![]() |
இந்த அரண்மனை ஒன்பது மாடிகளைக் கொண்டது. மேலே உள்ள மாடிகளில் அரச குடும்பத்தினர் தங்கினர். கீழே உள்ள பகுதிகள் பொருட்கள் சேமிக்கும் அறையாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த அரண்மனை இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது. இதன் உயர் மாடிகளில் இருந்து லே பள்ளத்தாக்குப் பகுதி முழுவதையும் காணலாம். இந்த அரண்மனையின் பின்புறம் இமயமலைத் தொடர் உள்ளது.[1]
இந்த அரண்மனையின் அருங்காட்சியகத்தில் விலை உயர்ந்த நகைகள், ஆபரணங்கள், உடைகள் மற்றும் மணிமுடிகள் உள்ளன. 450 வருடத்திற்கு முந்தைய சீன பாணி ஓவியங்களும் உள்ளன. இவை பிரகாசமான வண்ணங்களுடன் புதிது போல் கானப்படுகின்றன. வண்ணங்களுக்காக கற்களைப் பொடி செய்து பயன்படுத்தியுள்ளனர்.[2]
இந்த அரண்மனையை நாம் க்யால் அரச பரம்பரையைச் சார்ந்த ட்ஸ்வாங் நாம்க்யால் 1553 கட்டத் தொடங்கினார். பின்னர் அவரது மருமகன் செங்கி நாம்க்யால் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.