தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர் From Wikipedia, the free encyclopedia
நச்சினார்க்கினியர் (Nacchinarkiniyar) இடைக்கால தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்து கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார்.[1][2][3] குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய 20 பாடல்களுக்கு மட்டுமே நச்சினார்க்கினியார் உரை எழுதி நிறைவு செய்தார் என்றும் குறுந்தொகை பதிப்பாசிரியர் குழு கூறுகிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.