Remove ads
From Wikipedia, the free encyclopedia
நசியான் கிரகோரி ( கிரேக்க மொழி: Γρηγόριος ὁ Ναζιανζηνός Grēgorios ho Nazianzēnos; c. 329[1] – 25 ஜனவரி 389 or 390[1]), அல்லது நசியானுஸ் கிரகோரி என்பவர் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டான்டினோபிலின் பேராயர் ஆவார். திருச்சபைத் தந்தையர்களுள் இவர் மிகவும் குறிக்கத்தக்க இடத்தைப்பெருகின்றார்.[2]:xxi நன்கு கற்றறிந்த மெய்யியலாளரான இவர் ஹெலனிசக்கொள்கைகளை துவக்கத்திருச்சபையில் கொணரக்காரனியானார். பைசாந்தியப் பேரரசில் இறையியலாளர்களின் முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார்.[2]:xxiv
புனித நசியான் கிரகோரி | |
---|---|
ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | கி.பி 329 அரியான்சும், கப்படோசீயா, துருக்கி |
இறப்பு | 25 ஜனவரி 389 / 390 அரியான்சும், கப்படோசீயா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கிழக்கத்திய கிறித்தவம், மேற்கத்திய கிறித்தவம் |
முக்கிய திருத்தலங்கள் | Patriarchal Cathedral of St. George in the Fanar |
திருவிழா | மரபுவழி திருச்சபை: ஜனவரி 25 கத்தோலிக்க திருச்சபை: ஜனவரி 2 (c. 1500–1969 மே 9) ஆங்கிலிக்க ஒன்றியம்: ஜனவரி 2 லூதரனியம்: ஜூன் 14 |
சித்தரிக்கப்படும் வகை | ஆயர் உடைகளில் |
கிரேக்க மற்றும் இலத்தீன் இறையியலாளர்களீடையே இவரின் திரித்துவம் குறித்த இறையியட்கொள்கைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் இவர் திரித்துவ இறையியலாளர் எனவும் அறியப்படுகின்றார். இவர் கப்போடோசிய தந்தையர்களுள் ஒருவராவார்.
கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறித்தவத்தில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவர் மறைவல்லுநர்களுள் ஒருவராவார்; கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் இவரை புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பசீலோடு சேர்த்து மூன்று புனித தலைவர்கள் (Three Holy Hierarchs) எனப்போற்றுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.