Remove ads
கத்தாரின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia
தோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.
இந்த நகரம் கத்தார் பல்கலைக்கழகம் மற்றும் HEC பாரிஸ் வணிகப் பள்ளியின் வளாகமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.