தொ. மு. பாஸ்கர தொண்டைமான் (சூலை 22, 1904 - மார்ச் 31, 1965) ஒரு தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | |
---|---|
பிறப்பு | திருநெல்வேலி | 22 சூலை 1904
இறப்பு | மார்ச்சு 31, 1965 60) | (அகவை
பணி | வேலூர் மாவட்ட ஆட்சியர் |
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்து கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளையின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்ப இராமாயணம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ”வட்டத் தொட்டி” என்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணியில் சேர்ந்தார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.
2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது.
படைப்புகள்
- ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
- ஆறுமுகமான பொருள்
- இந்தியக் கலைச்செல்வம்
- இரசிகமணி டி.கே.சி
- கம்பன் சுய சரிதம்
- கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்
- சீதா கல்யாணம்
- பட்டி மண்டபம்
- பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
- வேங்கடத்துக்கு அப்பால் (வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு)
- வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) முதல்பாகம்
- வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) இரண்டாம் பாகம்
- வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) மூன்றாம் பாகம்
- வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) நான்காம் பாகம்
- வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) ஐந்தாம் பாகம்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.