தில்லி சுல்தானகத்தின் 20வது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கியாத்-உத்-தின் துக்ளக் சா (Ghiyath-ud-din Tughluq Shah II) துக்ளக் கான் என்ற பெயரில் பிறந்த இவர் பதே கானின் மகனும் மற்றும் பிரூசு சா துளக்கின் பேரனுமாவார். தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் சுல்தானான இவர் கி.பி.1388 இல் அரியணை ஏறினார்.[1] இருப்பினும், மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா தனது சகோதரர் ஜாபர் கானின் மகன் அபு பக்கர் கானின் ஆதரவுடன் தில்லியின் மீது உரிமை கோரினார். துக்ளக் கான் தனது மாமாவுக்கு எதிராக சிர்மூர் மலையின் அடிவாரத்தில் படைகளைச் சந்தித்தார். ஒரு சிறிய போருக்குப் பிறகு நசீருதீன் முகமது சா காங்க்ரா கோட்டையில் தஞ்சம் அடைந்தார். துக்ளக் கானின் இராணுவம் நிலப்பரப்பின் சிரமங்களால் அவரை மேலும் பின்தொடராமல் தில்லிக்குத் திரும்பியது. இறுதியில், சில அமீர்கள் ஜாபர் கானின் மகன் அபுபக்கர் கானுடனும் சுல்தான் பிரூசு சா துக்ளக்கின் பேரனுடனும் சேர்ந்து துக்ளக் கானைக் கொல்லத் திட்டமிட்டனர். 1389 ஆம் ஆண்டில் அவர்கள் சுல்தானையும் அவரது பிரதம அமைச்சர் ஜஹான் கானையும் சுற்றி வளைத்து, அவர்களைக் கொன்றுவிட்டு, தில்லி நகரின் நுழைவாயிலில் தலையைத் தொங்கவிட்டனர். துக்ளக் கானின் ஆட்சிக் காலம் ஐந்து மாதங்கள் பதினெட்டு நாட்கள் மட்டுமே இருந்தது.
Ghiyath-ud-din Tughluq Shah II | |
---|---|
துக்ளக் கானின் உலோக நாணயம் | |
20வது தில்லி சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 20 செப்டம்பர் 1388 – 14 மார்ச் 1389 |
முடிசூட்டுதல் | 21 செப்டம்பர் 1388 |
முன்னையவர் | பிரூசு சா துக்ளக் |
பின்னையவர் | அபுபக்கர் சா |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 14 மார்ச் 1389 தில்லி, தில்லி சுல்தானகம், நவீன இந்தியா |
அரசமரபு | துக்ளக் வம்சம் |
தந்தை | பதே கான் |
மதம் | சுன்னி இசுலாம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.