Remove ads
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
திருமங்கலம் (ஆங்கிலம்:Tirumangalam) - மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும்.
திருமங்கலம் | |||||||
ஆள்கூறு | 9°49′18″N 77°59′21″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | மதுரை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | உமாவிஜயன் | ||||||
சட்டமன்றத் தொகுதி | திருமங்கலம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
51,251 (2011[update]) • [convert: invalid number] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10.70 சதுர கிலோமீட்டர்கள் (4.13 sq mi) • 150 மீட்டர்கள் (490 அடி) | ||||||
குறியீடுகள்
|
மதுரை மாவட்டத்தில், (9.8216°N 77.9891°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமைந்துள்ளது.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் பட்டியல் இனத்தவர்கள் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன.[5]
மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, உத்தாண்டன் தெருவில் இப்போது உள்ள கோவிலில் இருக்கும் நடராஜர் சுவாமியை குல தெய்வமாக வழிபடும் விஸ்வகர்ம இனத்து பொற்கொல்லர் பொன்னை உருக்கி திருமாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் திருமாங்கல்யபுரம் என அழைத்தனர். காலப் போக்கில் திருமங்கலம் என பெயர் மாறியது. இன்றும் மதுரை நெல்பேட்டை பகுதியில் திருமாங்கல்யம் செய்வதற்கென்றே பிரத்யோகமாக இருக்கின்றனர் இந்த பொற்கொல்லர் வாரிசுகள்.[6]
கீழத்தெரு பழைய ஜூம்மா பள்ளிவாசல் முகலாயப் பேரரசர் நவாப் இருந்த காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. கீழத்தெரு பழைய பள்ளிவாசல் திருமங்கலத்தில் பெரிய பள்ளிவாசல் ஆகும்.இப்போது அந்த பள்ளிவாசல் இடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது
ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர். அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது. அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டன. வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது. மேலும், 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்குதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தது. காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர்[7][8].
1875-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாகச் செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர். பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது[8].
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்(கீழப்பள்ளிவாசல்)
நவாப் பள்ளிவாசல்(மேலப்பள்ளி)
முகமத்ஷாபுரம் பள்ளிவாசல்
புதுப்பள்ளிவாசல்
மதினா பள்ளிவாசல்
மக்கா பள்ளிவாசல்
தவ்ஹீத் பள்ளிவாசல்
நாகூர் ஆண்டவர் தர்ஹா
• கொடிமரத்தெரு நாகூர்ஆண்டவர் தர்ஹா கொடியேற்றும் விழா ஜமா அத் ஆகிர் பிறை 1 கொடியேற்றும் விழா சிறப்பாக இருக்கும் பிறை 9 சந்தனக்கூடு ஊர்வலம் மஸ்தானம்மா தர்ஹாவில் இருந்து சந்தல் எடுத்து வரப்பட்டு சந்தனக்கூடு உள்ளே வைத்து இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை ஊர்வலம் போகும். திருமங்கலம் முழுவதும் கொண்டுவரப்படும். மறுநாள் சாதாரணமாக சந்தல் இல்லாமல் சந்தனக்கூடு. சிறுவர் குழந்தைகள் பார்ப்பதற்கு சிலம்பாட்டம். சிலம்பாட்டம், கொட்டு, கேரள கொட்டு, நாதஸ்வரம், முஸ்லீம் பாட்டுக்கச்சேரி என பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
• மஸ்தானம்மா தர்ஹா கொடியேற்றும் விழா சிறப்பாக இருக்கும். நெர்ச்சை சீனீச்சோறு வழங்கப்படும்; சிறப்பாக இருக்கும்.
வைகாசித் திருவிழாவில் கோயில் மற்றும் பொருட்காட்சி நடைபெறும் இடங்களின் அருகில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பால் ஐஸ் கடைகள் முளைக்கும். சிறு பீப்பாய்களில் பசும்பால், சீனி மற்றும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ், திருவிழா நடைபெறும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மக்கள் மத்தியில் பிரசித்தம். பிற நாட்களில் ஓரிரண்டு கடைகளில் கிடைக்கும்.[9]
மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன.
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.
திருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.
அரவிந்த் கண் மருத்துவமனை
நான்கு வழிச்சாலை என்ற பெயரில், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நீராதாரங்களான மறவன்குளம், குதிரைச்சாரிக்குளம், செங்குளம், கரிசல்பட்டி போன்ற கண்மாய்களை மூடி சாலை அமைக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டாண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் 600அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. மேலும் தற்போது தண்ணீர்ப் பஞ்சமும் நிலவி வருகின்றது.
மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது.
திருமங்கலம் நகர் எல்லையிலிருந்து 2கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளை பணம் கட்ட சொல்லியும், மாதாந்திர பாஸ் எடுக்கச் சொல்லியும் இடையூறு செய்கின்றனர். நகர மக்களின் ஒற்றுமையால் இது அவ்வப்போது தடுக்கப்படுகிறது. ஆனாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
நகரின் வளர்ந்து வரும் பகுதியாக உள்ள கற்பகநகர் செல்லும் வழியில் ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் மணிக்கு 3 முதல் 5 முறை மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசலும், ஆம்புலன்ஸ்கள் வர தாமதத்தால் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன. நிதி ஒதுக்கப்பட்டு 2024ல்
பணி துவங்கி நடைபெறுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.