From Wikipedia, the free encyclopedia
தியோடோர் வான் அப்போல்சர் (Theodor von Oppolzer) (26 அக்டோபர் 1841 – 26 டிசம்பர் 1886) ஒரு ஆசுத்திரியர் சார்ந்த வானியலாரும் கணிதவியலாரும் ஆவார். இவர் ஒரு பொகிமியர்.[1][2]
இவர் யோகான் இரிட்டர் வான் அப்போல்சர் என்ற மருத்துவரின் மகனாவார். தியோடோர் பிராகா நகரில் பிறந்தார். இவர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். 1865ல் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தனி வான்காணகம் ஒன்று வைத்திருந்தார். இவர் 1866ல் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் வானியலும் புவிமேற்பரப்பியலும் பயிற்றுவித்தார். 1875ல் பேராசிரியரானார். 1873ல் இவர் ஆசுத்திரிய புவிமேற்பரப்பியல் துறையின் இயக்குநர் ஆனார். 1886இல் பன்னாட்டுப் புவிமேற்பரப்பியல் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் திறமைமிக்க வானியலாராகவும் கணிதவியலாராகவும் கருதப்பட்டார். எடுத்துகாட்டாக இவர் 14,000 மடக்கைகளின் மதிப்புகளை மனனமாக வைத்திருந்தார். 1868இல் சூரிய ஒளிமறைப்பு நோக்கீட்டுக் குழுவை வழிநடத்தினார். 1887ம் ஆண்டு, கிமு 1,200 முதல் கிபி 2,161 வரையிலான 8,000 சூரிய ஒளிமறைப்புகளையும் 5,200 நிலா ஒளிமறைப்புகளையும் தொகுத்து Canon der Finsternisse என்ற நூலை எழுதினார்.[3] அவர் காலத்தில் இது மாபெரும் கணிப்புப் பணியாகப் பரவலாக அறியப்பட்டது.
அப்போல்சர் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை பெரும்பாலும் வால்வெள்ளி, குறுங்கோள்களின் வட்டணைகளின் கூறுகளை பற்றியே அமைந்தன. இவர் வால்வெள்ளி, கோள்களின் வட்டணை உறுப்புகளைக் கண்டறிதல் பற்றிய இரட்டைத்தொகுதிகளால் ஆகிய கையேட்டையும் வெளியிட்டுள்ளார்.[4] இவரது இரு நூல்களும் பல ஆண்டுகளுக்கு சிறந்த வானியல் ஆலோசனை (உசாத்துணை) நூல்களாகப் பயன்பட்டன.
இறக்குந் தறுவாயிலும் அவர் நிலாவின் இயக்கத்துக்கான கோட்பாட்டை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஈகோன் வான் அப்போல்சரும் வானியலாளராகிப் பெரும் பெயரீட்டினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.