தமிழ்த்திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் | |
---|---|
இயற் பெயர் | மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் |
பிறப்பு | மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | மார்ச்சு 1, 1910
இறப்பு | நவம்பர் 1, 1959 49) | (அகவை
வேறு பெயர் | எம்.கே.டி, பாகவதர் |
நடிப்புக் காலம் | 1934–1959 |
துணைவர் | கமலம் ராஜம் |
பிள்ளைகள் | எம்.கே.டி.ரவிந்திரன் |
பெற்றோர் | கிருஷ்ணசாமி ஆசாாி மாணிக்கம்மாள் |
சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்[1]. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.
இலட்சுமிகாந்தன் என்பவர் "சினிமா தூது" என்ற ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர் சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது. அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.
1944 நவம்பர் 9ம் நாள் சென்னையில் இலட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்[1], இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 41/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசைக்கு சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில்[1] இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார்[1]. மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.
அரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை[1] என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா))[1] இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு[1] "சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர்[1]. அனைவருக்கும் புரியும்படி பாடினார்.
அன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும்[1]. ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ்[1] நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்[1] என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.
அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.
தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்)[1] கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி, முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி[1].
சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார்[1]. சிந்தாமணியில் பாடிய
“ | ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ | ” |
என்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்[1].
இறுதியில் நவம்பர் 1, 1959, சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.