இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் From Wikipedia, the free encyclopedia
தாமஸ் சாண்டி (Thomas Chandy) (29 அக்டோபர் 1947 - 20 திசம்பர் 2019)[1][2] ஓர் இந்தியத் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் குட்டநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராகவும், கேரளாவில் தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஆலப்புழாவில் உள்ள இவரது விடுதி தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இவர் 15 நவம்பர் 2017 அன்று அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 20 திசம்பர் 2019 அன்று கொச்சியில் இறந்தார்.
தாமஸ் சாண்டி | |
---|---|
கேரள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் 1 ஏப்ரல் 2017 – 15 நவம்பர் 2017 | |
முன்னையவர் | ஏ. கே. சசீந்திரன் |
பின்னவர் | ஏ. கே. சசீந்திரன் |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2006 – 20 திசம்பர் 2019 | |
தொகுதி | குட்டநாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சென்னம்கரி, திருவிதாங்கூர், இந்திய ஒன்றியம் (தற்போதைய ஆழப்புழா, கேரளம், இந்தியா) | 29 அக்டோபர் 1947
இறப்பு | 20 திசம்பர் 2019 72) கடவந்திரா, கொச்சி, கேரளம், இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
துணைவர் | மெர்சி சாண்டி |
பிள்ளைகள் | 3 |
இணையத்தளம் | www |
தாமஸ் சாண்டி 29 அக்டோபர் 1947, அன்று வி.சி.தாமஸ் -அலேயம்மா ஆகியோரின் மகன்களில் ஒருவராகப் ஆலப்புழா மாவட்டத்தின் சென்னம்கரி என்ற ஊரில் பிறந்தார். ஆலப்புழா தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து தொலைத்தொடர்பு பொறியியலில் சான்றிதழ் பட்டம் பெற்றார்.[3] இவர் மெர்சி என்பவரை மணந்தார்.[4]
கேரள மாணவர் ஒன்றியம் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1970 இல் அதன் தலைவரகவும் குட்டநாட்டின் இளைஞர் காங்கிரசின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் 2006 தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக ஜனநாயக இந்திரா காங்கிரஸ் (கருணாகரன்) கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.[5] பின்னர் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் இணைந்தார். பின்னர் 2011 தேர்தலுக்காக இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் இணைந்தார். தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து பிரகடனத்தின் அடிப்படையில்,[6] இவர் 920 மில்லியனுக்கும் அதிகமான இந்திய ரூபாய் சொத்துகளுடன் சட்டசபையில் பணக்கார சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[7]
சாண்டிக்கு கல்வி மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆர்வம் இருந்தது. இவர், கேரளாவில் ஐக்கிய இந்தியப் பள்ளி,[10] ஒரு இந்தியப் பொதுப் பள்ளி, குவைத்தில் உள்ள ஒரு மத்தியப் பள்ளி [11] ஆகியவற்றின் தலைவராக இருந்தார். இவர் சவூதி அரேபியாவின் ரியாத்தில் அல்-ஆலியா சர்வதேச இந்தியப் பள்ளியையும் நடத்தினார்.[12] கேரளாவின் வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ள "லேக் பேலஸ் ரிசார்ட்" என்ற ஒரு விடுதியையும் நடத்தி வந்தார்.[13]
இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் சாண்டி தனது உண்மையான சொத்து மதிப்பை அறிவிக்கவில்லை என்று ஒரு ஊடக அறிக்கை குற்றம் சாட்டியது. இவர் ஆலப்புழாவில் உள்ள தனது விடுதியில் வேம்பநாட்டு ஏரியை ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். விடுதியிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக மிதவைகளை மிதக்க வைக்க மாநில அரசு அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளை இவர் பெற்றுள்ளார் என்பது பின்னர் மாவட்ட ஆட்சியரால் கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மிதவை பகுதிக்குள் இயக்கம் உரிமைகள் பற்றி யாரும் புகார் செய்யவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.[14]
அக்டோபர் 2017 இல் இவர் சட்டவிரோதமாக ஒரு விடுதியையும் அதைச் சுற்றி ஒரு சாலையையும் அமைத்தார் எனவும், சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான பகுதியான குட்டநாடு பிராந்தியத்தில் நீர் கால்வாய்களையும், நெல் வயல்களையும் ஆக்கிரமித்தார் எனவும் சாண்டிக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் ஆரம்ப அறிக்கைகள் இவருக்கு எதிராக இருந்தன. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி, விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.[needs update]
இவர் குவைத் மற்றும் கேரளாவில் சமூக சேவகராக இருந்தார். குவைத்தில், முக்கியமாக கேரளாவிலிருந்து வெளிநாட்டவர்கள் வசிக்கும் ஒரு புறநகர்ப் பகுதியில் கழிவுகளை அகற்றும் மற்றும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.[15] குவைத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் வேலை தருவதாக உறுதியளித்த இந்திய செவிலியர்கள் வேலை மோசடியில் ஏமாற்றப்பட்ட வழக்கில் இவர் தலையிட்டார்.[16]
சாண்டி, தாவீத்புத்ரா நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்தார். இது வீடுகள் கட்டுதல், சுகாதார வசதிகள், சுகாதார பராமரிப்பு, கல்வி உதவி போன்ற பிற சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.[17]
சாண்டி, புற்றுநோயால் 20 திசம்பர் 2019 அன்று தனது 72 வயதில் இறந்தார்.[18][19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.