தமிழ்ப் பக்தி இயக்கம்

From Wikipedia, the free encyclopedia

தமிழ்ப் பக்தி இயக்கம் கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை தமிழகத்தில் செயற்பட்ட சமய சமூக அரசியல் இயக்கமாகும். தமிழர்களின் பல சங்ககால விழுமியங்களுக்கு சார்பாகவும், வைணவ சமயம் சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும், அக்காலப்பகுதியில் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ்ப் பக்தி இயக்கம் அமைந்தது.

காலம்

தமிழ் பக்தி இயக்கம் கி.பி 600 முதல் கி.பி 900 வரையான காலப்பகுதியினை பக்தி இயக்கம் என்பர். இக்காலத்தில் பல்லவர்கள் ஆட்சியாண்டனர்.

இந்தக் காலப்பகுதியில் பிராகிருதம் ஆட்சி மொழியாகவும் அரசவை மொழியாவும் செல்வாக்கு பெற்று "தமிழ்ப்பகைமையுணர்வும்" "தமிழர்களின் உணர்வாளுமையும்" பாதிக்கப்பட்டிருந்தது.[1]

பக்தி இலக்கியங்கள்

தமிழ் பக்தி இலக்கியங்கள் என்பது சைவம், வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்மார்களில் சிலர் சைவ சமயத்தினையும் வளர்க்க பல்வேறு இலக்கியங்களை படைத்தனர். இந்த இலக்கியங்களின் துணை கொண்டே சமண, பௌத்த சமயங்கள் தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், முதலாழ்வார் ஆகிய மூவரால் இந்த தமிழ் பக்தி இலக்கியம் தொடங்கப்பட்டது. கிபி 6 முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரை இந்த இலக்கியங்கள் இயற்றப்பட்டன.[2] காரைக்கால் அம்மையார் பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம்,கடைக்காப்பு, புதிய யாப்பு வடிவான கலித்துறை மற்றும் வெண்பா வடிவத்தினை பக்தி இலக்கியத்தில் அறிமுகம் செய்தார்.[3] அவரைப் பின்தொடர்தே பல இல்ககியங்கள் தோன்றின.

தோற்றம்

சிலர் பக்தி இயக்கம் வட இந்திய சமயத் தாக்கங்களின் வெளிப்பாடு என்கின்றார்கள். அக்கூற்றை நோக்கி, தமிழ்ப் பக்தி இலக்கியம் தொகுப்பாசிரியர் அ. அ. மணவாளனின் பின்வரும் கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

[4]

விமர்சனங்கள்

"தமிழர்களின் பக்தியுணர்வும், தமிழுணர்வும் பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பகடைகாயாக பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என்று மிகவும் தாமதமாக தமிழறிஞர்கள் தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள்." [5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.