தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
தட்டை மொச்சை | |
---|---|
பூக்கும் தட்டை மொச்சை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | விசியா |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/விசியாவ. ஃபாபா (faba) |
இருசொற் பெயரீடு | |
வ ஃபாபா (faba) கார்ல் இலின்னேயசு | |
வேறு பெயர்கள் | |
Faba sativa Moench. |
தட்டை மொச்சை (Vicia faba) என்பது அவரை, பட்டாணிக் குடும்பத்தச் சேர்ந்த பூக்குந் தாவரமாகும். தட்டைஅவரை, ஃபாவா அவரை எனவும் அழைக்கப்படுகிறது. இது தோன்றிய இடம் அறியப்படவில்லை.[1]:160 இது உணவுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஊடுபயிராக நிலத்தை வளப்படுத்தவும் பயிரிடப்படுகிறது. குதிரைத் தீவனமாகப் பயன்படும் இதன் வன்மையான சிறிய கொட்டைகளைக் கொண்ட பயிரிடும்வகை கொள்ளு( Vicia faba var. equina ) எனப்படுகிறது Pers., இது தாவரவியலாக ஏற்கப்பட்ட பயிரிடும்வகையின் பெயராகும்.[2]
சிலர் தட்டை மொச்சையை உண்டால் குருதிச் சிதைவு நோய்க்கு ஆளாகின்றனர். இது G6PDD வகை வளர்சிதைமாற்ற ஒழுங்கின்மையால் ஏற்படுகிறது. மற்றபடி, விதையின் மேலுறையை நீக்கிப் பருப்பாகப் பச்சையாகவும் வேகவைத்தும் வறுத்தும் உண்ணலாம். இளங்காய்களாக விதை மேலுறையைச் சேர்த்தே கொட்டையாக உண்ணலாம். மேலும் இளங்காய்களைத் அதன் பொட்டுத் தோலுடன் உண்ணலாம்.
தட்டை மொச்சை (Vicia faba) 0.5 முதல் 1.8 மீ உயரம் வளரும் உறுதியாகநிமிர்ந்துநிற்கும் தாவரமாகும். இதன் தண்டுகள் சதுர வெட்டுமுகம் உள்ளவை. இலைகள்10 முதல் 25 செமீ நீளங் கொண்டன. இதன் கூட்டிலை 2–7 சிற்றிலைகளால் ஆனதாகும். இலைநிறம் சாம்பற் பச்சையானது. பிற அவரையினத் தாவரங்களைப் போல, இதன் இலைகளில் பிற தாவரங்களில் படர்வதற்கான பற்றுகம்பி அமைவதில்லை.
பூக்கள் ஐந்து இதழ்களுடன் 1 முதல் 2.5 செமீ நீளத்தில் உள்ளன; வழக்கமாக அல்லி இதழ்கள் வெண்ணிறத்தில் அமையும். சிலவேளைகளில் அதில் கரும்புள்ளிகள் இருக்கலாம் ( உண்மையான கருப்பாக அமையுமே தவிர, , ஆழ் ஊதா அல்லது நீல நிறத்தில் இருக்காது)[3] புல்லி இதழ்களும் வெண்ணிறத்தில் இருக்கும். செஞ்சிவப்பு நிறப் பூக்களும் தட்டை மொச்சையில் அமைதலுண்டு; அண்மையில் இவ்வகை அழிவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.[4] பூக்கள் தேனீக்களையும் பிற பொலன்சேர்க்கைக்கு உதவும் உயிரிகளையும் கவரும் நறுமணத்தைப் பெற்றுள்ளது.[5]
விதை அகன்ற தோற்பொட்டில் பச்சை நிறத்தில் இருக்கும். விதை முதிரும்போது அடர்கருப்புப் பழுப்பு நிறங்கொள்ளும். வழுவழுப்பான மேற்பரப்புடன் அமையும்; இத்ஹன் காட்டுவகைக் காய்கள் 5 முதல் 10 செமீ நீளமும் 1செமீ விட்டமும் கொண்டவை; ஆனால், உணவுக்காகத் தற்கால பயிரிடும்வகைகளின் காய்கள்15 முதல் 25 செமீ நீளமும் 2 முதல் 3 செமீ தடிப்பும் கொண்டுள்ளன. ஒவ்வொரு காயிலும் 3 முதல் 8 விதைகள் வட்டவடிவிலோ முட்டைவடிவிலோளில் 5 முதல் 10 செமீ விட்டத்துடன் காட்டுவகைக அமைந்தன.னஆனால், இவை வழக்கமாக தட்டையாக 20 முதல் 25 மிமீ நீளத்துடனும், 15 மிமீ அகலத்துடனும் 5–10 மிமீ தடிப்புடனும் உணவுக்கான பயிரிடும்வகைகளில் அமைகின்றன. வி, ஃபாபா இருமடியம் இருமடியவகை (2n) , 12 குறுமவக எண் ( ஆறபொருமித்த இணைகள்) உள்ளது). இவற்றில் ஐந்து அண் மையக் குறுமவகங்களாக அமைய, ஓரிணை மட்டும் நடுமையக் குறுமவகங்களாக உள்ளன.
உணவாற்றல் | 1425 கிசூ (341 கலோரி) |
---|---|
58.29 g | |
நார்ப்பொருள் | 25 g |
1.53 g | |
26.12 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (48%) 0.555 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (28%) 0.333 மிகி |
நியாசின் (B3) | (19%) 2.832 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (28%) 0.366 மிகி |
இலைக்காடி (B9) | (106%) 423 மைகி |
உயிர்ச்சத்து சி | (2%) 1.4 மிகி |
உயிர்ச்சத்து கே | (9%) 9 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (10%) 103 மிகி |
இரும்பு | (52%) 6.7 மிகி |
மக்னீசியம் | (54%) 192 மிகி |
மாங்கனீசு | (77%) 1.626 மிகி |
பாசுபரசு | (60%) 421 மிகி |
பொட்டாசியம் | (23%) 1062 மிகி |
சோடியம் | (1%) 13 மிகி |
துத்தநாகம் | (33%) 3.14 மிகி |
நீர் | 11 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.