From Wikipedia, the free encyclopedia
டாலசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dallas/Fort Worth International Airport, (ஐஏடிஏ: DFW, ஐசிஏஓ: KDFW)) டாலஸ் நகருக்கும் வொர்த் கோட்டை நகருக்கும் இடையில் அமைந்துள்ள டெக்சஸ் மாநிலத்தின் மிகுந்த போக்குவரத்துடைய வானூர்தி நிலையமாகும்.[1] இது பொதுவாக டாலசு–வொர்த் கோட்டை பெருநகரப் பகுதிகள் இணைந்த கூட்டு நகரப் பகுதிக்கு சேவை வழங்குகிறது.
டல்லாசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||||||||||||||||||
உரிமையாளர் | டாலஸ் நகரம் வொர்த் கோட்டை நகரம் | ||||||||||||||||||||||||||||||||||
இயக்குனர் | டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம் | ||||||||||||||||||||||||||||||||||
சேவை புரிவது | டாலஸ்-வொர்த் கோட்டை கூட்டுப் பெருநகரம் | ||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | கொப்பல், யூலெசு,கிரேப்வைன், இர்விங் | ||||||||||||||||||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||||||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||||||||||||||||||||||||||
உயரம் AMSL | 607 ft / 185 m | ||||||||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | www.dfwairport.com | ||||||||||||||||||||||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||||||||||||||||||||||
FAA airport diagram | |||||||||||||||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
உலங்கூர்தித் தளங்கள் | |||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2010) | |||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
டிஎஃப்டபுள்யூ என்ற ஆங்கிலச் சுருக்கத்தினால் அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் உலகின் வானூர்தி இயக்கப் போக்குவரத்து மிகுந்த நிலையங்களில் நான்காவதாக உள்ளது.[2] பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இது உலகின் எட்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரும் முனைய மையமாக விளங்குகிறது.
டிஎஃப்டபுள்யூ நிலையம் ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது. தனியான அஞ்சலக சுட்டெண்ணைக் கொண்ட இந்நிலையத்தின் பொதுச்சேவைகளுக்கு தனி அமைப்பு உள்ளது. ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறை இதற்கெனத் தனியாக டிஎஃப்டபுள்யூ ஏர்போர்ட், டிஎக்ஸ் என்ற அடையாளத்தை வழங்கியுள்ளது.[3]
18,076 ஏக்கர்கள் (7,315 ha) நிலப்பரப்பில்[4] அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நிலப்பரப்பளவில் டெக்சசின் மிகப்பெரிய ஒன்றாகவும் ஐக்கிய அமெரிக்காவில் டென்வர் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]
இந்த வானூர்தி நிலையத்தின் நிர்வாகத்தை டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம் மேற்கொள்கிறது. இதன் வாரிய உறுப்பினர்களை இந்த நிலையத்தின் உரிமையாளர் நகரங்களான டாலசும் வொர்த் கோட்டையும் நியமிக்கின்றன. இந்த வானூர்தி நிலையம் நான்கு புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளதால், ஆளுமை குறித்த பல சட்டபூர்வ வழக்குகள் எழுந்துள்ளன. தனது அண்மைப் பகுதிகளுடன் சுமுக உறவை மேற்கொள்ள நிலைய வாரியம் இர்விங், யூலெசு, கிரேப்வைன், கொப்பல் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வாக்களிக்க உரிமை இல்லா உறுப்பினர்களை ஏற்றுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.