Remove ads
இத்தாலிய உரோமன் கத்தோலிக்க பாதிரியார், கல்வியாளர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
ஜான் போஸ்கோ (இத்தாலியம்: Giovanni Melchiorre Bosco (இயற்பெயர்); 16 ஆகத்து 1815[1] – 31 சனவரி 1888 ), ஓர் இத்தாலிய உரோமன் கத்தோலிக்கக் குருவும், கல்வியாளரும், 19ஆம் நூற்றாண்டின் எழுத்தாளரும் ஆவார். இவர் தன் வாழ்நாளெல்லாம் ஏழை எளியவர்களின் பிள்ளைகளுக்கும், தெருவில் அலைந்து திரிந்த இளையோரின் முன்னேற்றத்திற்கும் உழைத்தார். இவர் இத்தகையோரின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தண்டனை சார்ந்த கல்வி முறையை விடுத்து அன்பு சார்ந்த கல்வி முறையைப் பின்பற்றினார்.[2]
புனித ஜான் போஸ்கோ | |
---|---|
குரு; ஆதீனத்தலைவர்; இளையோரின் தந்தை மற்றும் ஆசிரியர் | |
பிறப்பு | காசல்நுவோ தே ஆஸ்தி, பியத்மாந்து, இத்தாலி | 16 ஆகத்து 1815
இறப்பு | 31 சனவரி 1888 72) | (அகவை
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் |
அருளாளர் பட்டம் | 2 ஜூன் 1929, உரோமை by பதினொன்றாம் பயஸ் |
புனிதர் பட்டம் | 1 ஏப்ரல் 1934, உரோமை by பதினொன்றாம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | கிறித்தவர்களின் சகாய அன்னை பேராலயம், துரின், இத்தாலி |
திருவிழா | 31 சனவரி |
பாதுகாவல் | கிறித்தவர்கள், வேலை பழகுபவர், பதிப்பாசிரியர்கள், பதிப்பாளர்கள், பள்ளி சிறார்கள், இளையோர், கண்கட்டி வித்தை புரிவோர் |
டொன் போஸ்கோ இத்தாலியில் கஸ்ட்டல்நுவோ எனும் நகரில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிரான்செஸ்கோ பொஸ்கோ, மார்கரட் ஒச்சீனா ஆகியோருக்கு இளைய மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோர் ஒழுக்கத்தையும் ஆன்மிகத்தையும் இவர் பால் விதைத்தனர். இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக விளங்கினார்.
தனது ஒன்பதாவது வயதில் அவர் கண்ட கனவினால் உந்தப்பட்டு தான் ஒரு குருவாவது என முடிவெடுத்தார்[3]. சிறைச்சாலைகள் தோறும் நிரம்பியிருந்த இளைஞர்களை சந்தித்து மனம் வெதும்பினார். இவர்கள் சிறு தவறுகளுக்காக இங்கு தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உண்மையான நல்ல நண்பகள் கிடைத்திருந்தால் இவர்கள் சிறை வந்திருக்க மாட்டர் என அறிந்து அவர்களுக்கு உணவு தங்குமிட வசதி செய்து கொடுத்து ஒன்று சேர்த்தார். அவர்களுக்கு கைத்தொழில்களை கற்றுக் கொடுத்தார்.
பிரான்சிசு டி சேல்சின் ஆன்மிகம் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தான் துவங்கிய ஆண்களுக்கான துறவற சபையினை அவரின் பெயராலேயே சலேசிய சபை என்று பெயர் வைத்தார். புனித மரிய மசரெல்லோவோடு இணைந்து பெண்களுக்கென கிறித்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் என்னும் துறவற சபையினைத் துவங்கினார். 1876 இல் பொது நிலையினருக்காக சலேசிய உடன் உழைப்பாளர்கள் என்னும் சபையினைத் துவங்கினார். இந்த மூன்று சபையினரின் நோக்கமும் ஏழைகளுக்கு பணிபுரிவதே ஆகும்.[4]
1875 இல் இவர் தன் சபையில் இருந்த அனைவருக்கும் சலேசிய சுற்றுமடலை முதன் முதலில் எழுதினார்.[5][6] அன்றிலிருந்து இன்றுவரை வெளிவரும் இச்சுற்று மடல், தற்போது ஐம்பதுக்கும் மேலான பதிப்புகளில், முப்பது மொழிகளில் வெளிவருகின்றது.[5]
1988 இல் இவரது இறப்பின் நூற்றாண்டு நிகழ்வின் போது திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஜான் போஸ்கோவை இவர் இளைஞர்களின் தந்தை, ஆசிரியர் மற்றும் நண்பர் எனப் பிரகடனம் செய்தார்.
இவர் நிறுவிய சபைகள் உலகம் முழுதும் பரவி, உலகின் பல நாடுகளிலும் சுமார் 2000க்கும் மேலான விடுதிகள், அனாதை இல்லங்கள், பள்ளிகள், விளையாட்டுக் குழுக்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள் இச்சபையினரால் ஏழைகளுக்கென நடத்தப்பட்டு வருகின்றன.
இவருக்கு பதினொன்றாம் பயஸ் 1934இல் புனிதர் பட்டம் அளித்தார்.
புனிதர் டொன் போஸ்கோவின் பெயரில் பாடசாலைகள் இலங்கையின் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் அட்டன் நகரில் 1934 ஆம் ஆண்டு புனித ஜோன் பொஸ்கோ ஆண்கள் கல்லூரி அமைக்கப்பட்டது.
புனித ஜோன் போஸ்கோவின் பிறப்பின் 200 வது ஆண்டு நினைவு விழா 2015 இல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மெழுகினால் உருவாக்கப்பட்ட அவரது உருவச்சிலையில் உள் வைக்கப்பட்டுள்ள அர்ச்சிட்ட பண்டமான அவரது வலது கரம் ஒரு திருப்பயணமாக உலகை சுற்றி வருகின்றது. இது 2011, நவம்பர் 19 ஆம் நாள் இலங்கை வந்தது[7].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.