From Wikipedia, the free encyclopedia
செபாஸ்டியன் நியூபோல்டு கோ (Sebastian Newbold Coe, Baron Coe, பிரித்தானியப் பேரரசின் சிறப்பு விருது (KBE) (பிறப்பு 29 செப்டம்பர் 1956), பரவலாக செப் கோ,[1] இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் தட கள விளையாட்டாளர் மற்றும் அரசியல்வாதி. நடுத்தர தொலைவு ஓட்டக்காரராக கோ நான்கு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்; 1980 மாசுகோ ஒலிம்பிக்கிலும் 1984 லாசு ஏஞ்செல்சு ஒலிம்பிக்கிலும் 1500 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். எட்டு வெளியரங்க உலகச் சாதனைகளையும் மூன்று உள்ளரங்க உலக சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்.
த ரைட் ஹானரபிள் த லார்டு கோ பிரித்தானிய பேரரசின் விருது | |
---|---|
2012 உலக பொருளியல் மன்றத்தில் செபாஸ்டியன் கோ | |
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃபால்மௌத் & கேம்போர்ன் | |
பதவியில் ஏப்ரல் 9, 1992 – மே 2, 1997 | |
முன்னையவர் | டேவிட் மட் |
பின்னவர் | கேன்டி ஆதர்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1956 சிஸ்விக், இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் |
துணைவர்(கள்) | நிக்கி மெக்கிர்வின் (1990–2002)(மணமுறிவு ) கரோல் அன்னெட் (2011 நாளதுவரை) |
உறவுகள் | பீட்டர் கோ (தந்தை, மறைவு) |
பிள்ளைகள் | 2 மகன்கள், 2 மகள்கள் |
முன்னாள் கல்லூரி | லௌபரோ பல்கலைக்கழகம் |
வேலை | பியர் (மாண்பு மிக்கவர்) , விளையாட்டு வீரர் |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
நாடு பெரிய பிரித்தானியா | ||
ஆடவர் தட கள விளையாட்டுக்கள் | ||
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
1980 மாசுகோ | 1500 மீ. | |
1984 லாசு ஏஞ்செல்சு | 1500 மீ | |
1980 மாசுகோ | 800 மீ. | |
1984 லாசு ஏஞ்செல்சு | 800 மீ | |
ஐரோப்பிய தடகள விளையாட்டுப் போட்டிகள் | ||
1978 பிராக் | 800 மீ | |
1982 ஏதென்சு | 800 மீ | |
1986 இசுடட்கர்ட் | 800 மீ | |
1986 இசுடட்கர்ட் | 1500 மீ |
தடகள விளையாட்டுக்களிலிருந்து ஓய்வு பெற்றபிறகு 1992-97 காலங்களில் ஐக்கிய இராச்சிய கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2000ஆம் ஆண்டில் மேலவையின் வாழ்நாள் உறுப்பினர் (பியர்) ஆக நியமிக்கப்பட்டார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களை இலண்டனில் ஏற்று நடத்த உருவாக்கப்பட்ட ஏலக்குழுத் தலைவராக பணியாற்றி வெற்றி பெற்றார். தொடர்ந்து இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு செயற் குழுத் தலைவராக உள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.