இரண்டாம் நூற்றாண்டு உரோமானிய மெய்யிலாளர், மருத்துவர் From Wikipedia, the free encyclopedia
செக்சுட்டசு எம்பிரிக்கசு (Sextus Empiricus, பண்டைக் கிரேக்கம்: Σέξτος Ἐμπειρικός; அண். கிபி 160 – 210), ஒரு மருத்துவரும் மெய்யியலாளரும் ஆவார். இவர் அலெக்சாந்திரியா, உரோம், ஏதென்சு எனப் பலவேறு இடங்களில் வாழ்ந்தவராகக் கூறப்படுகிறார். இவரது மெய்யியல் நூல்கள் மட்டுமே பண்டைய கிரேக்க, உரோம ஐயுறவுவாதத்தை அறிய உதவும் கருவிகளாக உள்ளன.
செக்சுட்டசு எம்பிரிக்கசு Sextus Empiricus | |
---|---|
பிறப்பு | அண். கிபி 160 |
இறப்பு | அண். கிபி 210 (அகவை 49–50) அலெக்சாந்திரியா அல்லது உரோம் |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | ஐயுறவியல், புலனறிவாதப் பள்ளி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | பிரோனியப் பத்து முறைமைகள் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
தனது மருத்துவ நூலின்படி, இவர் புலனறிவாதப் பள்ளியைச் சேர்ந்தவராக மதிப்பிடப்படுகிறார். அவர் பெயரும் அதைக் குறிப்பதைக் காணலாம். என்றாலும் தனது எழுத்துகளில் இருமுறை தன்னை முறையியல் பள்ளிக்கு (methodic school) நெருக்கமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார். இது ஒருவகையில் அவரது மெய்யியல் கண்ணோட்டத்தோடு ஒத்துப்போகிறது எனலாம்.
செக்சுட்டசு எம்பிரிக்கசுவின் மூன்று நூல்களாவன: "பிர்ரோனிய அடிப்படைகள்" (Outlines of Pyrrhonism, பொதுவாக இது PH எனும் அஃகுப் பெயரால் அழைக்கப்படுவது). மற்ற இருநூல்கள் ஒரே தலைப்பில், "கணிதவியலாளரை எதிர்த்து" (Adversus Mathematicos), என அழைக்கப்படுகின்றன. ஒருவேளை இதில் ஒன்று முடிவுறாத நூலாக இருக்கலாம்.
"கணிதவியலாளரை எதிர்த்து" (Πρὸς μαθηματικούς, Pros mathematikous) எனும் நூலின் முதல் ஆறும் வழக்கமாக பேராசிரியர்களை எதிர்த்து என அழைக்கப்படுகிறன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனியான மரபுப் பெயருமுண்டு:[2]
நூல் | மரபுத் தலைப்பு | மூலத் தலைப்பு |
---|---|---|
I | இலக்கணிகளை எதிர்த்து | Πρὸς γραμματικούς/ Pros grammatikous |
II | அணிநயப்பாளரை எதிர்த்து | Πρὸς ῥητορικούς/ Pros rhetorikous |
III | வடிவியலாளரை எதிர்த்து | Πρὸς ἠθικούς/ Pros ethikous |
IV | எண்ணியலாளரை எதிர்த்து | Πρὸς ἀριθμητικούς/ Pros arithmetikous |
V | கணியவியலாளரை (சோதிடரை) எதிர்த்து | Πρὸς ἀστρολόγους/ Pros astrologous |
VI | இசைக்கலைஞர்களை எடிர்த்து | Πρὸς μουσικούς/ Pros mousikous |
"கணிதவியலாளரை எதிர்த்து" I–VI என்ற தொகுப்பு "கணிதவியலாளரை எதிர்த்து" VII–XI எனும் தொகுப்பினும் வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. பின்னது "வறட்டுவாதிகளை எதிர்த்து" (Πρὸς δογματικούς, Pros dogmatikous) எனும் தலைப்பால் சுட்டப்படுவதாலேயே இப்படி கருதலாயிற்று. எஞ்சிய பிறநூல்கள் I–II, III–IV, V என எண்ணிடப்பட்டுள்ளன. என்றாலும் இதற்கு முன்னே எத்தனை நூல்கள் காணவில்லை என்பது உறுதிப்படவில்லை. அதேபோல இதற்குப் பிறகு எத்தனை நூல்கள் அமைந்திருந்தன என்பதும் தெரியவில்லை. பொதுவாக இவை "ஐயுறவுவாத நூல்கள்" (Σκεπτικὰ Ὑπομνήματα /Skeptika Hypomnēmata) எனும் பொதுத் தலைப்பில் அமைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[3]
VII-VII | ஏரணவியலாளரை எதிர்த்து | Πρὸς λογικούς/ Pros logikous |
IX-X | இயற்பியலாளரை எதிர்த்து | Πρὸς φυσικούς/ Pros Physikous |
XI | அறவியலாளரை எதிர்த்து | Πρὸς ἠθικούς/ Pros Ethikous |
"கணிதவியலாளரை எதிர்த்து", "பிரோனிய அடிப்படைகள்" ஆகிய இருநூல்கள் மட்டுமே கையெழுத்துப்படிகளில் உள்ளன. மற்றவை கிடைக்கவில்லை.
செக்சுடசு எம்பிரிக்கசு அனைத்துவகை அறிவுக்கும் பொருந்தும் அக்கறைகளை எழுப்பினார். டேவிடு இயூமுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே இவர் விரிமுறை ஏரணத்தின் சரித்தன்மையை ஐயத்துக்குள்ளாக்கினார்.[4] மேலும் அனைத்துவகை அறிவுவாதத்துக்கும் எதிராக பின்னேகல் (regress) விவாதத்தை முன்வைத்தார்:
உண்மையை மதிப்பிடுவதாகக் கூறும் ஒருவர் அந்த உண்மை அறிவதற்கான வரன்முறை ஒன்றை பெற்றிருக்கவேண்டும். இந்த வரன்முறை தீர்ப்பாளரின் ஒப்புதல் பெற்றதாகவோ அல்லது ஒப்புதல் பெறாத்தகவோ இருக்கவேண்டும். அது ஒப்புதல் பெறாதாக இருந்தால், அது எப்படி உண்மைத்தகவுடையதாகும்? தீர்ப்பின்றியே யாதொன்றையும் நம்பலாமா? ஒருவேளை அது ஒப்புதல் பெற்றதாக இருந்தால், அப்படி ஒப்புதல் தந்த வாயில் ஒப்புதல் பெற்றதாகவோ அல்லது ஒப்புதல் பெறாத்தகவோ இருக்கவேண்டும். இப்படி இந்த வாதம் முடிவே இன்றி .ஈறிலிவரை. தொடரும்..[5]
பிரோனியம் கோட்பாடாக அமைவதைவிட ஒரு மனப்பான்மை அல்லது மருத்துவமுறை போல உள்ளது. பொருள்களும், காரணங்களும் இணைஎதிர்வுப் பான்மைகளைக் கொண்டிருப்பதால் பிரோனியம் எதற்கும் எதிர்தரப்பை உருவாக்கி தீர்ப்பை ஒத்திப் போடுகிறது. "நாம் ஒன்று தோற்றங்களைத் தோற்றங்களாலும் அல்லது சிந்தனைப் பொருள்களைச் சிந்தனைப் பொருள்களாலும் அல்லது அவற்றின் மற்றமைகளாலும் எதிர்க்கிறோம்."[6] இதன் பத்து முறைமைகள் தீர்ப்பை ஒத்திப் போடத் தூண்டிட, அதன்வழி ஒத்திப்போடும் மனநிலையை உருவாக்கி, தொடர்ந்து துறவு அல்லது பற்றற்ற (ataraxia) நிலைக்குத் தள்ளிவிடுகிறது. ஒருவர் ஒரு கோட்பாட்டை எதிர்க்கும் நிலையில் இல்லாவிட்டால், பிரோனியர்கள் பின்வருமாறு பதிலிறுப்பர். "உங்களது சிந்தனைப் பள்ளியை நிறுவியவரின் பிறப்புக்கு முன்பே அது நிலவினாலும் அவரது கோட்பாடு மதிப்புள்ள கோட்பாடாகத் தோன்றாதது போலவே, நீங்கள் இப்பொது முன்மொழியும் எதிர்க்கோட்பாடும் முன்பே நிலவியதுதான் ஆனால் இதுவரை நமக்கு தெளிவுபடத் தோன்றாமலே இருந்துவந்ததுதான். இப்போது சரியானதாகப் பட்டாலும் இதை ஏற்கவேண்டிய காட்டாயம் ஏதும் எமக்கு இல்லையே."[7] இந்தப் பத்து முறைமைகள் அல்லது "பூடகங்கள்" முதலில் அனெசிடெமசுவால் தரப்பட்டுள்ளன.
இந்த பத்து முறைமைகளுக்கும் மேலாக, கீழ்வரும் மூன்று முறைமைகள் அமையும்:
இந்த மூன்று முறைமைகளுக்கும் கீழே உறவு முறைமை அமையும்.[19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.