From Wikipedia, the free encyclopedia
கார்னியாடெசு (Carneades, கிமு 214/3 – கிமு 129/8[1]) ஒரு கல்வியியல் ஐயுறவுவாதி. இவர் லிபியாவில் உள்ள சைரீனில் பிறந்தார். கி.மு 159அளவில் அவர் முந்தைய வறட்டுவாத நெறிகளை எதிர்க்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக உறுதிப்பாட்டுவாதம், Epicurean போன்ற மற்ற ஐயுறவுவாதிகளும் விட்டுவைத்த சுதாயிக்கியம், எப்பிகூரியனியம் போன்ற போக்குகளையும் கூட எதிர்க்கலானார். உரோமுக்கு கி.மு 155இல் அனுப்பப்பட்ட மூன்றுபேரில் பிளாட்டோனியக் கல்விக்கழகத் தலைவரான இவரும் ஒருவராவார். அங்கு இவர் ஆற்றிய நயன்மையின் உறுதியிலாமை குறித்த விரிவுரைகள் முன்னணி அரசியல்வாதிகளுக்குப் பெருங்கலவரத்தைத் தந்து அதிரச் செய்துள்ளது. இவர் எழுத்துவழி ஏதும் எழுதி வைக்கவில்லை. அவரது பின்னவரான Clitomachus வழியாகவே கார்னியாடெசின் கருத்துகள் எல்லாம் அறியப்பட்டுள்ளன. இவர் உண்மையை அறிவதில் புலன்களின் திறமையை மட்டுமன்றி, பகுத்தறிவு வழிமுறையையும் ஏற்கவில்லை. ஆனாலும் இவரது ஐயுறவுவாதம், அன்றாடம் சரியாக வாழவும் சரியாகச் செயற்படவும் தேவைப்படும் நிகழ்தகவான உண்மையை ஏற்றுச் சமனமுற்றது.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கார்னியாடெசு Carneades | |
---|---|
![]() கார்னியாடெசு கிமு 150 | |
பிறப்பு | கிமு 214/213 சைரீன், லிபியா |
இறப்பு | 5 நவம்பர், கிமு 128 ஏதென்சு |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | கல்வியியல் ஐயுறவியல், பிளேட்டோனியம் |
முக்கிய ஆர்வங்கள் | அறிவாய்வியல், நன்னெறி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மெய்யியல் ஐயுறவாதம், அறிவு பற்றிய நிகழ்தகவுக் கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
கார்னியாடெசு வட ஆப்பிரிக்காவில் லிபியாவைச் சார்ந்த சைரீனில் கி.மு 214/213இல் எப்பிக்கோமசு என்பவரின் மகனாகப் பிறந்தார். பிறகு அவர் ஏதென்சுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு சுதாயிக்குகளின் விரிவுரைகளைக் கேட்டார்.பாபிலோனைச் சார்ந்த டயோஜீனெசிடம் அவர்களது ஏரணவியலைப் பயின்றார். மேலும் கிரிசுப்பசின் நூல்களையும் படித்தார். கூர்மையான தன் மதிநுட்பத்தால் அவர்களை மறுப்பதில் முனைவோடு செயற்பட்டார்.
சுதாயிக்குகளால் சீரழிந்த பிளாட்டோனியக் கல்விக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஃஎகிசினசுஇறந்த பிறகு, அதன் கூட்டத் தலைமையை ஏற்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.அர்செசிலௌசுக்குப் பிறகு இவர் நான்காவது தலைவராவார். இவரது வாதப் பெருநயமும் திறமையும் அச்சிந்தனைப் பள்ளியின் புகழை மீட்டெடுத்தது. எதையும் உறுதிப்படுத்துவது இயலாது என்ற தனது எதிர்வெற்றிடநிலையைப் பயன்படுத்திப் பிற சிந்தனைப் பள்ளிகளின் நிலைகள் ஒவ்வொன்றையும் முனைவோடு எதிர்த்துப் போராடினார்.
கி,மு155இல், இவரது அகவை 58. அப்போடு இவர் ஒரோப்பசை அழிக்க எதீனியர்மீது விதிக்கப்பட்ட 500 பொற்காசுகளைத் தள்ளுபடி செய்யவைக்க, உரோமுக்குத் தூதுவராக அனுப்பப்பட்டார்.உரோமில் தங்கியிருந்தபோது தன் மெய்யியல் பாடங்களால் ஏராளமானோரைக் கவர்ந்துள்ளார். இங்கு தான் முதியவர் காட்டோ முன்னிலையில்நயன்மை (நீதி) குறித்த பல விரிவுரைகளை ஆற்றியுள்ளார். முதல் நாள் உரோமச் சட்டங்களைப் பாராட்டிப் பேசியுள்ளார். மறுநாளே நயன்மை அல்லது நீதி என்பதே சிக்கலானது என முன்னாள் கருத்தை எதிர்த்துப் பேசலானார். அது விழுமியம் சார்ந்து தரப்படுவதில்லை என்றும் அது எப்போதுமே சமூக ஒழுங்கை நிலைநிறுத்தவே வழங்கப்படுகிறது வாதிட்டுள்ளார். இதைக் கேட்ட காட்டோ அதிர்ச்சியடைந்து, இப்போக்கு உரோமாபுரி இளைஞர்களை அனைத்து உரோம நெறிமுறைகளையும் மீளாய்வுக்குக் கொணரவைக்கும் வாய்ப்புள்ளதை எண்ணியஞ்சி, உரோமப் பேரவையில் இவரைச் சொந்த நாட்டுக்கும் சொந்தப் பள்ளிக்கும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். இதற்குப் பிறகு கார்னியாடெசு 28 ஆண்டுகள் ஏதென்சில் வாழ்ந்தார்.
கார்னியாடெசு தளராத உழைப்புடையவராக இருந்துள்ளார். இவர் த்னது ஆய்விலேயே ஆழ்ந்திருந்ததால், முடியும் நகங்களும் அளவுக்கு மீறி வளர்ந்துள்ளன. இவர் மறதிப் பேராசிரியராக இருந்ததால், இவருக்கு உணவு, படிப்பு மேடையிலேயே அவரது மெலீசா என்ற வைப்பாட்டியாலும் வேலைக்காரராலும் ஊட்டவேண்டியதாக இருந்துள்ளது. இலத்தீன் எழுத்தாளரும் நூலாசிரியருமான வலேரியசு மேக்சிமசு, கிரிசுப்பசுடன் வாதிடுமுன் கார்னியாடெசு எப்போதும் கூர்மையான மதிநுட்பத்தோடு விளங்க எதற்கும் மடங்காமல் முயல்வாரெனக் கூறுகிறார்.[2] முதுமையில் அவர் கட்புரையால் துன்புற்றபோது மிகவும் பொறுமைகாத்தார். இருந்தாலும்,இயற்கை இந்தவழியிலா என்னைப் பழிவாங்கவேண்டும் எனச் சினந்து கூறியுள்ளார். மேலும்நஞ்சூட்டித் தன்னைத் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.[சான்று தேவை]
கார்னியாடெசு கல்விக்கழக ஐயுறவுவாதியாக அறியப்படுபவர். இவரும் இவரைச் சார்ந்த பிற ஐயுறவுவாதிகளும் கல்விக்கழக ஐயுறவுவாதிகளாகக் கருதப்படக் காரணம், ஏதென்சில் இருந்த பிளாட்டோனியக் கல்விக்கழகத்தில் தங்களது ஐயுறவுவாத்த்தைப் பயிற்றுவித்ததாலே யாகும். இவர்கள் அனைத்து அறிவும் இயலாததே என்றனர். இதற்கு உள்ள ஒரே விதிவிலக்கு அனைத்து அறிவும் இயலாதது என்பது மட்டுமே.
இவர் எழுத்தில் எதையும் விட்டுச் செல்லவில்லை. இவரைப் பற்றியும் இவரது விரிவுரைகளைப் பற்றியும் அறிவதெல்லாம் இவரது நண்பரும் மாணாக்கருமான கிளிட்டோமாக்கசு கூறுவதில் இருந்து தான் எனலாம். கிளிட்டோமாக்கசு தன் சொந்த ஒப்புதல் நெற்முறைகளுக்கு உண்மையாக இருக்க விரும்புவதால், எந்தவொரு கருப்பொருளைப் பற்றியும் தனது ஆசிரியர் என்ன கூறினார் எனத் தனக்குத் தெரியாது என்கிறார். [சான்று தேவை] கார்னியாடெசு நெடுநாட்கள் கடுமையாக உழைத்து ஆய்வுகள் செய்த அறவியலில், அறக்கருத்துகள் இயற்கையோடு பொருந்தியன என்பதை மறுக்கிறார். குறிப்பாக நயன்மை (நீதி) பற்றிய அவரது இரண்டாம் விரிவுரையில் இக்கருப்பொருள் பற்றிய தனது கருதல்களை வெளிப்படவே அறிவிக்க விழைகிறார். நயன்மை சார்ந்த கருத்துகள் இயற்கையில் இருந்து கொணரப்பட்டவையல்ல, மாறாக உடனடியாகத் தேவைப்படும் குறிக்கோள்களுக்காகச் செயற்கையாக உருவாக்கப் பட்டவையே என்கிறார்.[சான்று தேவை]
மக்கள் உண்மையைப் பற்றிய எந்த வரன்முறையையும் வைத்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல அப்படி வைத்திருக்கவும் முடியாது என்ற அவரது பொதுக்கோட்பாட்டில் இருந்தே மேற்கூறிய முடிவுகள் வருகின்றன.
வரன்முறை என ஒன்று இருந்தால் அது பகுத்தறிவிலோ (logos), அல்லது புலன் உணர்விலோ]] (aisthêsis), அல்லது கருத்திலோ (phantasia) இருக்கவேண்டும் என வாதிடுகிறார். ஆனால் பகுத்தறிவு கருத்தைச் சார்ந்த்து. கருத்தோ புலன் உணர்வைச் சார்ந்தது. எனவே புலன் உணர்வை சரியானதா பொய்யானதா என மதிப்பிடும் கருவி ஏதும் இல்லாததால் புலன் உணர்வுகளை உருவாக்கும் பொருள்களுக்கு நிகரான உண்மையை பகுத்தறிவு தருகிறதா அல்லது தவறான மனப்பதிவைத் தருகிறதா எனக் கூறல் சற்றும் முடியாது. எனவே கருத்துகளும் அதைச் சார்ந்த பகுத்தறிவும் பிழைபட வாய்ப்புள்ளது. எனவே புலன் உணர்வோ, கருத்தோ, பகுத்தறிவோ உண்மைக்கான வரன்முறைகளாக அமைய முடியாது.[சான்று தேவை]
என்றாலும் மக்கள் வாழவும் செயல்படவும் நடைமுறை வாழ்க்கை விதிகள் கட்டாயமாகத் தெவைப்படுகின்றன; எனவே எதையொன்றையும் முடிந்தமுழு உண்மையாக்க் கொள்ளமுடியாவிட்டாலும் பல்வேறு அளவுடைய நிகழ்தகவுடைய உன்மையை நிறுவலாம். ஏனெனில், ஒரு புலன் உணர்வையோ, கருத்தையோ தன்னளவில் உண்மையாகாவிட்டாலும், சில உணர்வுகள் மற்றவற்றைவிட சரியான உண்மையாக உள்ளமை தோன்றுகிறது. கூடுதலாக உண்மையாகத் தோன்றுபவற்றை நாம் வழிகாட்டுதலாக்க் கொள்ளலாம். மறுபடியும் ஒன்றைக் கருதலாம். உணர்வுகள் தனியானவையல்ல. மற்றவருடன் இணைந்து பகிரப்படுபவை.அப்படிப் பகிரப்படும்போது ஒத்தும் போகலாம். முரண்படவும் நேரலாம்; ஒத்துபோதல் கூடக் கூட அதன் உண்மையாகும் நிகழ்தகவு கூடும். இது தான், அதாவது உயர்நிகழ்தகவு ஒத்துபோதல் தான் கார்னியாடெசுக்கு உண்மையை அணுக்கமாக அடையும் அணுகுமுறையாகிறது.[சான்று தேவை]
Seamless Wikipedia browsing. On steroids.