From Wikipedia, the free encyclopedia
சூல்வலிப்பு (Eclampsia) இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் சூல்வலிப்பும் இழுப்பும் ஆகும்.[1] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் என்பது ஒரு கருவுற்றநிலைக் கோளாறு ஆகும். இந்நிலையில் உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் புரதமிகையும் அமையும்; ஏதாவதொரு உறுப்பில் அல்லது பல உறுப்புகளில் செயலிழப்பும் ஏற்படலாம்.[7][8] இது மகப்பேற்றுக்கு முன்போ மகப்பேற்றின்போதோ அல்லது அதற்குப் பின்போ ஏற்படலாம் .[1] பெரும்பாலும் இது கருவுறலின் இரண்டாம் அரைப்பகுதியில் ஏற்படும்.[1] வலிப்புகள் வலிவான சுருங்கி விரியும் தசைத்துடிப்பு வகையினதாகும். இது ஒரு மணித்துளி நேரம் இருக்கும்.[1] வலிப்புக்குப் பின் மனமருட்சியோ புலன் மறக்கடிப்போ (coma) ஏற்படும்.[1] நுரையீரல் அழற்சி, பெருமூளைக் குருதியொழுக்கு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகிய சிக்கல்கள் நேரலாம்.[1] சூல்வலிப்பும் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலும் பல பேரளவு கருவுற்றநிலை உயர்குருதியழுத்தக் கோளாறுகளின் ஒரு பகுதியாகும்.[1]
சூல்வலிப்பு | |
---|---|
பிரசவத்திற்குப் பிறகு வெட்டப்பட்ட சூல்வித்தகத்தின் மொத்த உடற்கூறியல் படம் | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | வலிப்புகள், உயர் இரத்த அழுத்தம்[1] |
சிக்கல்கள் | நுரையீரல் அழற்சி, பெருமூளைக் குருதியொழுக்கு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு[1] |
வழமையான தொடக்கம் | கருவுற்ற 20 வாரங்களுக்குப் பிறகு[1] |
சூழிடர் காரணிகள் | சூல்நிலைக் குளிர்காய்ச்சல்[1] |
தடுப்பு | ஆஸ்பிரின், கால்சிய நிரப்புகள், குருதியழுத்த மருத்துவம்[2][3] |
சிகிச்சை | மக்னீசியம் சல்பேட்டு, ஐட்ரலாசைன், நெருக்கடிமுறை மகப்பேறு[1][4] |
முன்கணிப்பு | 1% அளவு இறப்பு இடர்[1] |
நிகழும் வீதம் | 1.4% மகப்பேறுகளில்[5] |
இறப்புகள் | உயர்குருதியழுத்தக்கருவுறலால் 46,900 பேர் இறந்தனர் (2015)[6] |
இதற்கு மருத்துவமாக, உயர் இடர் வாய்ந்தவர்களுக்கு ஆசுப்ரின் தரப்படும். உணவு குறைவாக உட்கொள்பவர்களுக்கு கால்சிய நிரப்பு மாத்திரைகள் தரப்படும். உயரழுத்தம் வருவதற்கு முன்பு மாத்திரைகள் தரப்படும்.[2][3] கருவுற்றநிலை உடற்பயிற்சிகளும் நலம் தரலாம்.[1] மகனீசிய்ம் சல்பேட்டைச் சிரையிலோ தசையிலோ செலுத்துதல் வலிப்புக்கு பாதுகாப்பாக உதவுகிறது.[4][9] இது வளர்ந்த, வளரும் நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.[4] செயற்கை மூச்சுயிர்ப்பும் தேவைப்படலாம்.[1] ஐட்ரலாசைன் போன்ற உயர்குருதியழுத்த மருந்துகள் தருதல், அல்குல் வழியாகவோ அறுவையாலோ நெருக்கடி மகப்பேறு நிகழ்த்துதல் இரண்டும் நல்ல தீர்வுகளாக அமையும்.[1]
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் 5% அளவு மகப்பேறுகளிலும் சூல்வலிப்பு 1.4% அளவு மகப்பேறுகளிலும் ஏற்படுகிறது.[5] நல்ல மருத்துவ ஏந்துள்ளதால், வளர்ந்த நாடுகளில் 2000 மகப்பேறுகளில் ஒன்றில் இறப்பு ஏற்படுகிறது.[1] கருவுறலின்போதான இறப்புகளில் உயர்குருதியழுத்தக் கோளாறு மிகப் பொதுவான காரணமாக அமைகிறது.[10] இவை 2015 ஆம் ஆண்டில் மட்டும் 46,900 இறப்புகள் ஏற்பட்டன.[6] சூல்வலிப்பால் மட்டும் 1% பெண்கள் இறக்கின்றனர்.[1] இந்த eclampsia எனும் சொல் மின்னல் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[11] முதன்முதலில் இந்நிலை கி. மு 5 ஆம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசால் விவரிக்கப்பட்டது.[11]
சூல்வலிப்பு என்பது இளம்பேற்றுக் காய்ச்சலின்போது வலிப்புகளைத் தரும் கருவுறல்நிலைக் கோளாறு ஆகும்.[12] சூலுற்ற பெண்களுக்கு சூல்வலிப்புக்கு முன்பே உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் புரதமிகையும் ஏற்படுகின்றன.[13]
சூல்வலிப்புக்கு முன்னும் பின்னும் மேற்கூறிய அறிகுறிகள் அமையலாம்.[14] இந்த நோய்க்குறிகள் ஏதும் உருவாகாமலும் போகலாம்.
பிற பெருமூளை அறிகுறிகளாக, உடனே குமட்டல், வாந்தி, தலைவலி, புரனிக் குருட்டுநிலை ஏற்படலாம். பல உறுப்புகள் செயலிழக்கும் அளவுக்குச் சிக்கலாகும்போது, அவ்வுறுப்புகள் செயலிழக்கும் அறிகுறிகள் தோன்றும். அப்போது அடிவயிற்று வலியும் மஞ்சள் காமாலையும், குறுமூச்செறிவும் சிறுநீர் வெளியீடு குறைத்தலும் ஏற்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.