சிறுநீரகச் செயலிழப்பு

From Wikipedia, the free encyclopedia

சிறுநீரகச் செயலிழப்பு

சிறுநீரகச் செயலிழப்பு (Renal failure or kidney failure), முன்னதாக சிறுநீரக பற்றாமை, என்ற மருத்துவ நிலை சிறுநீரகங்கள் குருதியிலிருந்து நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் தேவையான அளவில் வடிகட்டாது இருப்பதாகும். இது உடனடியாகத் தாக்கும் (கடிய சிறுநீரகக் காயம்) மற்றும் நாள்பட்ட (நெடுநாள் சிறுநீரகக் கோளாறு) செயலிழப்பு என இருவகைப்படும்; பல்வேறு மருத்துவ நிலைகளும் நோய்களும் இவற்றில் ஒன்று வரக் காரணமாக அமையலாம்.

விரைவான உண்மைகள் சிறுநீரகச் செயலிழப்பு, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
சிறுநீரகச் செயலிழப்பு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரகவியல்
ஐ.சி.டி.-10N17.-N19.
ஐ.சி.டி.-9584-585
நோய்களின் தரவுத்தளம்26060
ம.பா.தC12.777.419.780.500
மூடு
Thumb
கூழ்மப்பிரிப்பு கருவி, சிறுநீரகச் செயலிழப்பின்போது சிறுநீரகங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரகத்தில் உள்ள குளோமெரூல் எனப்படும் சிறுநீரகச் குறுங்குழல்களில் நீர்வடி வீதம் குறைவதே சிறுநீரகச் செயலிழப்பு எனப்படுகிறது. குருதியில் சீரம் கிரியாட்டின் அளவு கூடுதலாவது குறித்து உயிர்வேதியியலில் சிறுநீரகச் செயலிழப்பு அறியப்படுகிறது. சிறுநீரகத்தின் கோளாறினால் உடலில் நீர்மத்தின் அளவு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாவது, குழம்பிய அமில அளவுகள், வழக்கத்திற்கு மாறான அளவுகளில் பொட்டாசியம், கால்சியம், பாசுபேட்கள் தவிர நாள்பட இருந்தால் இரத்த சோகை மற்றும் உடைந்த எலும்புகள் ஒன்றுசேர தாமதமாவது போன்ற அறிகுறிகளைக் காணலாம். தோன்றிய காரணத்தையொட்டி சிறுநீரில் குருதியோ புரதமோ வெளிப்படலாம். நீண்டகால சிறுநீரகச் செயலிழப்பு மற்ற (இதயக்குழலிய நோய்) போன்ற நோய்களைத் தீவிரமாக பாதிக்கிறது.

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.